கணவருடன் 10 வருட வாழ்க்கை.. ப்ரியா அட்லியின் எமோஷனல் பதிவு..!
- IndiaGlitz, [Friday,September 29 2023]
பிரபல இயக்குனர் அட்லியின் மனைவி பிரியா அட்லி, தனது சமூக வலைத்தளத்தில் தான் முதல் முறை அட்லியை சந்தித்தது முதல் இன்று வரையிலான 10 வருட வாழ்க்கையை எமோஷனலாக பதிவு செய்துள்ளார்.
இந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது: உங்களை நண்பராக, காதலனாக, கணவனாக, தந்தையாக இப்போது நான் பார்ப்பது ஒரு அசாத்தியமான பயணம். உங்களைப் போன்ற அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு உள்ள ஒருவரை நான் இதுவரை பார்த்ததில்லை. உண்மையான உழைப்பு, மரியாதை, அர்ப்பணிப்பது தான் உங்களை இந்த இடத்திற்கு கொண்டு வந்து நிறுத்தி உள்ளது.
உங்களின் பயணத்தின் ஒரு பகுதியாக நான் இருப்பதில் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது. உங்களுக்கு என்றென்றும் மகிழ்ச்சி கிடைக்க வாழ்த்துகிறேன். எப்போதும் நானும், நம் மகனும் உங்கள் பக்கத்திலேயே இருப்போம். உங்கள் கைகளை பிடித்துக் கொண்டே உற்சாகப்படுத்துவோம். இன்னும் நீங்கள் மகத்தான உயரத்தில் வளர எனது வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.
இந்த எமோஷனல் பதிவுக்கு ரசிகர்களின் லைக்ஸ், கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது.