10 வருட காதல் பந்தம்: காஜல் அகர்வாலின் 'காதலர் தின' புகைப்படம்!
- IndiaGlitz, [Monday,February 14 2022]
இது 10 வருட காதல் பந்தம் என தனது கணவர் கௌதம் உடன் இருக்கும் புகைப்படத்தை காதலர் தின புகைப்படமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை காஜல் அகர்வால் பதிவு செய்துள்ளதை அடுத்து அந்தப் புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.
பிப்ரவரி 14ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தமிழ் திரையுலக பிரபலங்களும் தங்களுடைய காதலை, மறக்க முடியாத காதல் நினைவுகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த 2020 ஆம் ஆண்டு தனது நீண்டநாள் காதலர் தொழிலதிபர் கெளதமை திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால் தற்போது கர்ப்பமாக உள்ளார் என்பதும் முதல் குழந்தையை எதிர்பார்த்து இந்த தம்பதிகள் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் பத்து வருட காதல் பந்தத்தில் உள்ள தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை காஜல் அகர்வால் இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படத்திற்கு லட்சக்கணக்கான லைக்ஸ் குவிந்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.