ஜோதிகா புகார் கூறிய மருத்துவமனையில் பிடிபட்ட 10 பாம்புகள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை ஜோதிகா சமீபத்தில் சினிமா விழா ஒன்றில் பேசியபோது, ‘தஞ்சை மருத்துவமனைக்கு படப்பிடிப்பின் போது தான் சென்றதாகவும் அப்போது அங்கு பராமரிப்பு சரியில்லாமல் இருப்பதை பார்த்ததாகவும் கோவில்களுக்கு செலவழிப்பது போல மருத்துவமனைகளுக்கும் பள்ளிக்கும் செலவு செய்யவேண்டும்’ என்றும் கோரிக்கை விடுத்தார். ஜோதிகாவின் இந்த பேச்சு சர்ச்சைக்குள்ளானது. இந்த நிலையில் ஜோதிகா புகார் கூறிய அரசு மருத்துவமனையில் நேற்று 5 விஷத்தன்மை கொண்ட கட்டு விரியன் பாம்புகள் உள்பட 10 பாம்புகள் பிடிபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜோதிகா புகார் கூறிய அரசு மருத்துவமனையில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவரை மருத்துவமனை வளாகத்தில் இருந்த பாம்பு ஒன்று நேற்று தீண்டியது. இதனையடுத்து அந்த பெண் ஊழியர் தற்போது தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்
இந்த சம்பவத்தை அடுத்து மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் உத்தரவின் பேரில் உடனடியாக மருத்துவமனை வளாகத்தில் உள்ள புதர்கள், ஜேசிடி எந்திரத்தின் மூலம் சுத்தம் செய்யப்பட்டது. அப்போது அங்கு சுற்றித் திரிந்த சுமார் பத்து பாம்புகளை வனவிலங்கு அதிகாரிகள் பிடித்தனர். இதில் கொடிய விஷம் கொண்ட 5 கட்டுவிரியன் பாம்புகள் இருந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது
மருத்துவமனை வளாகத்தில் பத்துக்கும் மேற்பட்ட பாம்புகள் சுற்றித்திரிந்த தகவல் அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கி உள்ளது இருப்பினும் சரியான நேரத்தில் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளதற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments