தி.நகர் பற்றிய சிறப்பு தகவல்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னையின் முக்கிய பகுதிகளில் ஒன்று தியாகராய நகர் என்று கூறப்படும் தி.நகர். . திராவிட இயக்கத்தில் மூத்த தலைவர்களில் ஒருவராகப் போற்றப்படும் பிட்டி தியாகராயர் அவர்களின் நினைவாக கடந்த 1925ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பகுதிதான் இந்த தியாகராயர் நகர் என்ற தி.நகர். இவரது பெயரில் தியாகராயர் அரங்கம் இன்றும் உள்ளது. வெளியூரில் இருந்து சென்னைக்கு வரும் சுற்றுலா பயணிகள் கடைசியாக ஊர் திரும்பும் முன் பர்சேஸ் செய்யும் இடமாக இருந்து வரும் தி.நகர் குறித்த சில அரிய தகவல்களை தற்போது பார்ப்போம்,
1. 1923-25ஆம் ஆண்டுகளில் தான் தி.நகர் உருவானது.
2. கடந்த 1916ஆம் ஆண்டு இங்கு மிகப்பெரிய ஏரி ஒன்று இருந்தது. தற்போதும் லேக்வியூ சாலை என்று மாம்பலம் பகுதியில் உள்ளதே இதற்கு சான்று.
3.கடந்த 1920ஆம் ஆண்டுகளில் சுப்பிரமணியம் ஐயர் என்பவர் இந்த பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தை சொந்தமாக வைத்திருந்தார்.
4. தி.நகரை விட பழமையான பகுதி மாம்பலம்.
5. கடந்த 1920ஆம் ஆண்டு தி.நகரில் ஒரு கிரவுண்ட் விலை ரூ.500 மட்டுமே.
6. 1923ஆம் ஆண்டு இந்த பகுதியில் ஒரு ஏக்கர் நிலம் ரூ.2000 மட்டுமே.
7. 1933ஆம் ஆண்டு பாண்டிச்சேரியை சேர்ந்த சொக்கலிங்க முதலியார் என்பவர் இந்த பகுதியில் பத்து கடைகளை கட்டி அதற்கு பாண்டி பஜார் என்ற பெயரை வைத்தார். அதுதான் இன்றைய பிசியான பாண்டி பஜாராக வளர்ந்துள்ளது.
8. 1948ஆம் ஆண்டுகளில் இன்றைய பிசியான பகுதியாக இருக்கும் ரெங்கநாதன் தெரு, ஒரு அக்ரஹாரமாக இருந்தது.
9. இரண்டாம் உலகப்போரின் போது ஹோலி ஏஞ்சல் பள்ளியை தற்காலிகமாக தி.நகருக்கு மாற்ற மெட்ராஸ் ஐகோர்ட் உத்தரவிட்டது.
10. கடந்த 1930ஆம் ஆண்டு தி.நகர் சமூக கிளப், 14 கிரவுண்ட் நிலத்தை அரசிடம் இருந்து வெறும் ரூ.2900 ரூபாய்க்கு விலைக்கு வாங்கியது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments