10 மாத குழந்தைக்கு கொரோனா வைரஸ்: அதிர்ச்சி தகவல் 

பொதுவாக கொரோனா வைரஸ் வயதானவர்களை தாக்கி வருவதாக மருத்துவர்கள் கூறி வருகின்றனர். வயதானவர்களுக்கு சர்க்கரை நோய், இரத்த அழுத்த நோய் ஆகியவை இருக்கும் என்பதால் அவர்களை வெகு வேகமாக கொரோனா வைரஸ் தொற்றி விடும் என்று கூறப்படுகின்றது.

இந்த நிலையில் இந்தியாவில் முதல் முறையாக 10 மாத குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்திலுள்ள பந்த்வால் என்ற தாலுகாவில் உள்ள 10 மாத குழந்தைக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அந்த குழந்தையின் பெற்றோர் உள்பட உறவினர்கள் அனைவரும் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். 10 மாத குழந்தைக்கு கொரோனா வைரஸை பரப்பியது யாராக இருக்கும் என்பது குறித்த விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்தியாவில் இன்று ஒரே நாளில் 75 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் இந்தியாவில் மொத்தம் 750 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா வைரசால் இந்தியாவில் இதுவரை 21 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு: மத்திய அரசுக்கு சரத்குமாரின் வேண்டுகோள்

இன்று காலை இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் செய்தியாளர்களை சந்தித்து ஒருசில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் என்பது குறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

கொரோனா எதிரொலி: எல்லையை இழுத்து மூடிய தமிழக கிராமம்

கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்க ஒவ்வொருவரும் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அரசு தீவிரமாக வலியுறுத்தி வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள ஒரு கிராமமே தன்னை தனிமைப்படுத்தி கொள்வது

அணுவை விடவும் சிறியது, அணுகுண்டை போல் கொடியது: வைரமுத்துவின் கொரோனா பாடல்

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனா குறித்த விழிப்புணர்வு பாடல் ஒன்றை கவியரசு வைரமுத்து எழுதியுள்ளார்.

ஊரடங்கு உத்தரவு எதிரொலி: மீண்டும் ராமாயணத்தை ஒளிபரப்பும் தூர்தர்ஷன்

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இந்தியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் வீட்டுக்குள் முடங்கி உள்ளனர்.

தமிழகத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா? ஊரடங்கையும் மீறி பரவும் வைரஸ்

கொரோனா வைரஸ் தமிழகத்தில் மிக தீவிரமாக பரவி வருவதை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அந்த உத்தரவையும் கடுமையாக கடைபிடிக்க வேண்டும்