10 லட்ச ரூபாயில் ஒரு தமிழ்ப்படம்: வரும் வெள்ளியன்று ரிலீஸ்!

  • IndiaGlitz, [Wednesday,April 10 2019]

தமிழ் சினிமாவின் பட்ஜெட் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. ஹீரோக்கள் சம்பளம் கோடியில், ஹீரோயின்கள் சம்பளம் லட்சத்தில் காமெடி நடிகர்களின் சம்பளம் நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கில் என குறைந்தது ரூ.50 கோடி இல்லாமல் ஒரு படம் தயாரிக்க முடியாது. இதுவே முன்னணி நடிகர்களின் படம் என்றால் பட்ஜெட் ரூ.100 கோடியை நெருங்கிவிடும்

இந்த நிலையில் வெறும் ரூ.10 லட்சம் செலவில் ஒரு தமிழ்ப்படம் தயாரிக்கப்பட்டு அந்த படம் வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ளது. அந்த படம் தான் 'ழகரம்'. ஒரு புதையலை தேடி செல்லும் நான்கு இளைஞர்களுக்கு நேர்ந்த அனுபவம் தான் இந்த படத்தின் கதை. நந்தா, ஈடன், விஷ்ணு பரத், சந்திரமோகன், மீனேஷ் கிருஷ்ணா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜோ, பரத்வாஜ், பிரின்ஸ் ஆகிய மூவர் ஒளிப்பதிவு செய்ய தரன் இசையமைத்துள்ளார்.

இந்த படம் குறித்து பற்றி இயக்குநர் க்ரிஷ் கூறுகையில், ஒரு புதையலைத் தேடி நான்கு பேர் செல்லும் பயணமே கதை. சென்னை, விசாகப்பட்டினம், காஞ்சிபுரம், தஞ்சாவூர் ,கோயம்புத்தூர் என்று கதை பயணிக்கிறது. 10 லட்ச ரூபாயில் ஒரு படம் எடுப்பது சவாலான விஷயமாக இருந்தது. இதை சாத்தியப்படுத்தியது நந்தாவின் ஆதரவுதான். அவர் கொடுத்த ஊக்கம் சாதாரணமானதல்ல. நண்பர்கள் பலர் உதவியுடன் படம் உருவாகியுள்ளது'' என்று கூறியுள்ளார். இந்த படம் தமிழகம் முழுவதும் மூன்று நாள் ஓடினாலே மிகப்பெரிய லாபம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

More News

அட்லி அலுவலகத்தில் ஷாருக்கான்: அப்ப அது உண்மைதானா?

நேற்று சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியை நேரில் பார்க்க கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக்கான் வந்திருந்தார்

விமான நிலையத்தில் தரையில் படுத்து தூங்கிய தல தோனி!

நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் விளையாடி சென்னை அணி வெற்றி பெற்றது.

ராஜூமுருகனின் 'ஜிப்ஸி' பட நடிகருக்கு திருமணம்

இயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில் ஜீவா நடித்த திரைப்படம் 'ஜிப்ஸி'. இந்த படத்தின் படப்பிடிப்பு, போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிந்து விரைவில் திரைக்கு வரவுள்ளது

உண்மை ஒருநாள் வெளியே வரும்! 25 வருடங்கள் கழித்து தாயின் கொலையை கண்டுபிடித்த மகன்

புளோரிடாவை அடுத்த ஜாக்சன்வில்லி (Jacksonville) என்ற பகுதியில் 25 வருடங்களுக்கு முன் காணாமல் போன தனது தாயின் உடலை அவரது மகன் கண்டுபிடித்துள்ளார்.

அஜித்தை இந்தி சினிமாவுக்கு அழைத்து வருவேன்: போனிகபூர்

பிரபல பாலிவுட் தயாரிப்பாளரும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனிகபூர் தயாரிப்பில் தல அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.