'காற்றின் மொழி' ஜோதிகாவின் 'பத்து கட்டளைகள்'
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜோதிகா நடிப்பில் ராதாமோகன் இயக்கத்தில் உருவாகி வரும் 'காற்றின் மொழி' படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடந்து வரும் நிலையில் இன்றைய சுதந்திர தினத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் பத்து கட்டளைகள் கூறப்பட்டுள்ளது. அந்த பத்து கட்டளைகள் இதுதான்:
1. உன் விருப்பம் போல் உடை உடுத்துவாயாக.
2. நீ விரும்புவதைச் செய்வாயாக.
3. உன் கணவன் உன்னை ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டாதிருப்பாயாக.
4. பசித்தால் முதலில் நீயே சாப்பிடுவாயாக.
5. குண்டாய் இருக்க விரும்பினால் குண்டாய் இருப்பாயாக.
6. வீட்டுப் பணிகளில் உன் கணவனையும் பங்கெடுக்க செய்வாயாக.
7. நீ சம்பாதித்து உன் விருப்பம் போல் செலவு செய்வாயாக.
8. உன் மனம் மறுப்பதை, ஏற்காதிருப்பாயாக
9. ஆணும் பெண்ணும் சரி சமம் என்பதை அறிவாயாக.
10. மனதில் பட்டதைச் சொல்வாயாக.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments