சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் பணிபுரியும் தற்காலிக கண்டக்டர்கள்

  • IndiaGlitz, [Monday,January 08 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கண்டக்டராக பணிபுரியும்போது அவருடைய ஸ்டைலை பார்த்து தான் அவருக்கு சினிமா வாய்ப்பு வந்தது என்பது அனைவரும் அறிந்ததே. அதைபோல வருங்கால சூப்பர்ஸ்டார்களாக தற்போது பணிபுரிந்து கொண்டிருக்கும் தற்காலிக கண்டக்டர்கள் உருவாக வாய்ப்பு இருப்பதாக பேருந்து பயணிகள் கூறுகின்றனர்.

பொதுவாக கண்டக்டர்கள் காக்கி அல்லது நீல நிற உடையணிந்து பணிபுரிவார்கள். ஆனால் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக தற்போது தினக்கூலி அடிப்படையில் பணிபுரிந்து கொண்டிருக்கும் கண்டக்டர்கள் ஜீன்ஸ் பேண்ட் உள்பட விதவிதமான உடையணிந்து பணிபுரிந்து வருகின்றனர். ஒருசிலர் ஸ்டைலாக லுங்கியை மடித்து கட்டி, கையில் கண்டக்டர் பைக்கு பதிலாக மஞ்சப்பையை வைத்து ஸ்டைலாக டிக்கெட் கொடுக்கின்றனர்.

புதுவித காஸ்ட்யூமுடன் ஸ்டைலாக டிக்கெட் கொடுக்கும் இந்த கண்டக்டர்கள் நிச்சயம் ஒருநாள் சூப்பர் ஸ்டார் ரஜினியை போன்று பெரிய ஆளாக வருவார்கள் என்று பயணிகள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

More News

சச்சின் மகளை கடத்துவதாக மிரட்டிய வாலிபர் கைது

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் தெண்டுல்கரின் மகளை கடத்துவதாக அவரது தொலைபேசிக்கு மிரட்டல் விடுத்த மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குஷ்புவிடம் சிக்கி சின்னாபின்னாமான அந்த குமாரு யாரு?

குஷ்புவையே ஆத்திரப்பட வைத்துள்ளார் ஒரு மர்ம மனிதர். சமீபத்தில் குஷ்பு, ஒருத்தன் ரொம்ப படுத்துறான்..டேய் நீ தலை கீழே நின்னாலும் நீ ஒரு லூசுதான்

உங்க மூஞ்சியெல்லாம் எங்க படத்தை காசு கொடுத்து பார்க்க வேண்டாம்: கோபத்தில் கொந்தளித்த சித்தார்த்

சித்தார்த், ஆண்ட்ரியா நடித்த 'அவள்' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் 'அவள்' படத்தை பார்க்க தவறியவர்கள் தற்போது நெட்பிளிக்ஸில் பார்த்து கொள்ளலாம்

கமல், ரஜினியை அடுத்து அரசியலில் குதிக்கும் பிரபல இயக்குனர்

கோலிவுட் திரையுலகில் இருந்து கமல், ரஜினி, விஷால், ராகவா லாரன்ஸ் ஆகியோர் அரசியலில் குதிக்கவுள்ள நிலையில் தற்போது இந்த பட்டியலில் கே.பாக்யராஜ் அவர்களும் இணையவுள்ளார்.

சூர்யா-பவன்கல்யாண் ரசிகர்களுக்கு ஏற்பட்ட திடீர் அதிருப்தி

ஒரு திரைப்படம் வியாபாரம் பேசும்போது தயாரிப்பாளரும் விநியோகிஸ்தரும் பேசி ஒரு தொகையை முடிவு செய்வார்கள். அந்த தொகையில் கருத்துவேறுபாடு இருந்தால் தயாரிப்பாளரே நேரடியாக திரையரங்குகளில் வெளியிடுவார்கள்