கோவில் முதலைக்கு ஓவியர் செய்த மரியாதை: வைரல் புகைப்படம்
- IndiaGlitz, [Tuesday,October 11 2022]
70 ஆண்டுகளாக கோவில் குளத்தில் முதலை ஒன்று கோவில் பிரசாதத்தை மட்டுமே சாப்பிட்டு வாழ்ந்து வந்த நிலையில் அந்த முதலை தற்போது இறந்துவிட்ட நிலையில் அந்த முதலைக்கு ஓவியர் ஒருவர் மரியாதை செய்துள்ள புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
கேரளாவில் உள்ள அனந்தபுரம் என்ற பகுதியில் உள்ள அனந்த பத்மநாபசாமி கோவிலில் கடந்த 70 ஆண்டுகளாக கோயில் பிரசாதத்தை மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழ்ந்த முதலை ஒன்று இறந்து விட்டதை அடுத்து பக்தர்கள் அந்த முதலைக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கேரளாவில் உள்ள ஆனந்த பத்மநாப சுவாமி கோவிலில் கடந்த 70 ஆண்டுகளாக கோவில் அர்ச்சகர் வழங்கும் நைவேத்தியம் செய்யப்பட்ட பச்சரிசி உள்பட பிரசாதங்களை மட்டுமே சாப்பிட்டு பாபியா என்ற முதலை உயிர் வாழ்ந்து வந்தது. கடந்த 1945 ஆம் ஆண்டு ஆங்கிலேய சிப்பாய் ஒருவர் இந்த ஆலயத்தில் குளத்தில் வாழ்ந்த முதலையை சுட்டுக்கொன்ற நிலையில் அடுத்த சில நாட்களில் மற்றொரு முதலை அதே கோவில் குளத்தில் தென்பட்டது. ‘பாபியா’ என்று பெயரிட்டப்பட்ட இந்த முதலை இதுவரை எந்த பக்தரையும் தாக்கிய சம்பவம் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்றிரவு ‘பாபியா’ முதலை இறந்து விட்டதை அறிந்த உடன் அந்த பகுதி மக்கள் ஏராளமானோர் முதலைக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ‘பாபியா’ முதலைக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஓவியர் கரன் ஆச்சார்யா என்பவர் தனது சமூக வலைத்தளத்தில் முதலையின் அசத்தலான ஓவியத்தை வரைந்து அஞ்சலி செலுத்தியுள்ளார். இந்த ஓவியம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.