ரஞ்சிதாவை அப்போதே நான் எச்சரித்து இருக்கலாம்: வருந்தும் சினிமா பிரபலம்!

  • IndiaGlitz, [Thursday,May 20 2021]

பாரதிராஜாவின் ’நாடோடி தென்றல்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் ’அமைதிப்படை’ ’கேப்டன்’ ’ஜெய்ஹிந்த்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்தவர் நடிகை ரஞ்சிதா. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சாமியார் நித்யானந்தாவின் ஆசிரமத்தில் இணைந்ததாக கூறப்பட்டது. அதுமட்டுமின்றி நித்தியானந்தாவும் ரஞ்சிதாவும் இணைந்த படுக்கையறை காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பின்னர் ரஞ்சிதாவுக்கு சினிமா மார்க்கெட் விழுந்தது என்பதும் நித்தியானந்தா ஆசிரமத்திலேயே அவர் செட்டிலாகி விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பிரபல தெலுங்கு வசனகர்த்தா மற்றும் எழுத்தாளருமான கோபாலகிருஷ்ணன் சமீபத்தில் அளித்த பேட்டியில் ரஞ்சிதா குறித்து கூறியுள்ளார். தனது மகளும் ரஞ்சிதாவும் நெருங்கிய தோழிகள் என்றும், ஒருமுறை ரஞ்சிதா தன்னுடைய வீட்டிற்கு வந்தபோது நித்யானந்தா புத்தகத்தை என்னிடம் கொடுத்து இதைப்பற்றி என்ன உங்களுக்கு தோன்றுகிறது என்று கேட்டார் என்றும், அப்பொழுது நான் எதுவும் கூறாமல் அமைதியாக இருந்து விட்டேன் என்றும் கூறியுள்ளார்

ஒருவேளை அப்போது நித்யானந்தாவின் உண்மை சொரூபத்தை கூறி அவரை நான் எச்சரிக்கை செய்து இருந்தால் ரஞ்சிதாவுக்கு இந்த நிலை தற்போது ஏற்பட்டு இருக்காது என்பதை நினைத்து பல முறை நான் வருந்தி இருக்கிறேன் என்றும் ரஞ்சிதாவும் இன்று சினிமாவில் நல்ல இடத்தை பிடித்து இருப்பார் என்றும் அவர் வருத்தத்துடன் தெரிவித்தார். இது குறித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.