தெலுங்கிற்கு செல்லும் விஜய்சேதுபதியின் முதல் படம்: பரபரப்பு தகவல் 

  • IndiaGlitz, [Thursday,October 08 2020]

தமிழ் நடிகராக மட்டுமின்றி தென்னிந்திய மொழிகளிலும் பாலிவுட்டிலும் நடித்து வருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி என்பது தெரிந்ததே. அந்த வகையில் மலையாள திரையுலகில் முதல் முதலாக விஜய் சேதுபதி நடித்த படம்தான் ’மார்கோனி மாத்தாய்’.

இந்த படம் கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியாகி மிகப் பெரிய ஹிட்டானது என்பதும், விஜய்சேதுபதியுடன் முக்கிய வேடத்தில் பிரபல மலையாள நடிகர் ஜெயராம் நடித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மலையாளத்தில் நல்ல ஹிட் ஆகியுள்ள இந்த படம் தற்போது தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்படுகிறது. தெலுங்கு டப்பிங் படத்திற்கு ரேடியோ மாதவ்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் சேதுபதியின் முதல் மலையாள திரைப்படமான ’மார்கோனி மாத்தாய்’ தெலுங்கிலும் நல்ல ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ஜிவி பிரகாஷின் அடுத்த படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர்!

இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் ஒரே நேரத்தில் தற்போது சுமார் பத்து படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அவற்றில் 'ஐங்கரன்', 'ஆயிரம் ஜென்மங்கள்', 'அடங்காதே'

தொடர்ந்து 13 ஆண்டாக இந்தியாவின் முதல் பணக்காரர் பட்டியலில் இடம் பிடித்தவர்!!! வியக்க வைக்கும் சொத்து மதிப்பு!!!

இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் நாளிதழ் வெளியிட்டு உள்ளது. அந்தப் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து 13 ஆண்டுகளாக இந்தியாவின் முதல் பணக்காரராக தேர்வு செய்யப்பட்டு வருகிறார்

ஒரு நாள் முதல்வர் பாணியில்… ஒரு நாள் அதிபர்…. உண்மைச் சம்பவம்!!!

பின்லாந்து அதிபராக 16 வயது சிறுமி ஆவா முர்டே இன்று பதவியில் அமர்ந்து இருக்கிறார். இச்சம்பவம் உலகையே திரும்பி பார்க்க வைத்து இருக்கிறது.

பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தியதால்… 3 காவலர்கள் பணியிடை மாற்றமா???

சமீபத்தில் கடலூரில் இருந்து 3 காவலர்கள் கள்ளக்குறிச்சிக்கு பணியிடை மாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.

ரத்தக்காடாக மாறிவரும் ஐடி நகரம்… பழிக்குப் பழி… கொலைச் சம்பவங்கள்…

நாட்டிலேயே பழிக்குப் பழி வாங்குவதற்காக ரத்தக்களரியில் ஈடுபடும் நகரங்களின் வரிசையில் பெங்களூர் முதல் இடத்தைப் பெற்றிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.