அவர் படத்தில் நடிப்பது ரொம்ப கஷ்டம், இருந்தாலும் ஆவலுடன் இருக்கின்றேன்: மகேஷ்பாபு

தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு சமீபத்தில் அளித்த பேட்டியில் இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் நடிப்பது ரொம்ப கஷ்டம் என்றும், ஆனாலும் அவரது படத்தில் நடிக்க மிகவும் ஆவலுடன் இருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

‘பாகுபலி’ ’பாகுபலி 2’ ’ஆர்.ஆர்.ஆர்’ போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கி உலகப்புகழ் பெற்றவர் இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலி. இவரது இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் மகேஷ்பாபு நடிக்க உள்ளார் என்றும், அமேசான் காடுகள் குறித்த கதையம்சம் கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பை அமேசான் காடுகளில் படமாக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்கும் என்று கூறப்படும் நிலையில் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் நடிக்கவிருக்கும் எதிர்பார்ப்பு குறித்து மகேஷ்பாபு சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது கனவு என்றும் அவரது இயக்கத்தில் ஒரு படம் நடிப்பது ஒரே நேரத்தில் 25 படங்களில் நடிப்பதற்கு சமம் என்றும் தெரிவித்தார்

உடல்ரீதியாக அவரது படத்தில் நடிக்கும்போது கஷ்டப்பட வேண்டியிருக்கும் என்றும் இருந்தாலும் அவருடன் பணிபுரிய மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார். எஸ்.எஸ்.ராஜமவுலி மற்றும் மகேஷ்பாபு இணையும் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன்பே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது