ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக கிடந்த பிரபல பாடகியின் தந்தை… துயரச் சம்பவம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தெலுங்கு சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம்வருபவர் ஹரிணி ராவ். இவருடைய தந்தை A.K.ராவ் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களுரு அருகே ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டு உள்ளார். இந்தச் சம்பவத்தை அடுத்து ரயில்வே போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தெலுங்கில் பிரபல பின்னணி பாடகி மற்றும் ஹிந்துஸ்தானி கிளாசிக்கல் சிங்கராக அறியப்படுவர் ஹரிணி ராவ். இவர் சினிமாவைத் தவிர கச்சேரிகள் மற்றும் இளம் கலைஞர்களை உருவாக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார். ஸ்ரீநகர் காலனியில் தனது குடும்பத்தினருடன் வசித்துவரும் இவரின் தந்தை A.K.ராவ் கடந்த சில தினங்களுக்கு முன்பு தொழில் சார்ந்த விஷயங்களுக்காக பெங்களூரு சென்றுள்ளார்.
கடந்த நவம்பர் 13 ஆம் தேதி பெங்களூர் சென்ற அவர் ஹோட்டலில் அறை எடுத்து தங்கியதாகக் கூறப்படும் நிலையில் கடந்த 21 ஆம் தேதி அந்த அறையில் இருந்து புறப்படுவதற்கு வாகனத்தை பதிவு செய்துள்ளார். இந்நிலையில் பெங்களூர் நகரத்தை அடுத்த யெலஹங்கா மற்றும் ராஜனுகுண்டே இடையே உள்ள தண்டவாளத்தில் கடந்த 21 ஆம் தேதி A.K.ராவ் சடலமாக கிடந்துள்ளார்.
மேலும் அவருடைய நெற்றி, மணிக்கட்டு, கழுத்தில் வெட்டுக்காயங்கள் இருந்ததாகக் கூறப்படும் நிலையில் அவருடைய உடலுக்கு அருகே கத்திரிக்கோல் மற்றும் கத்தி இருந்ததாகவும் போலீசார் தகவல் தெரிவித்து உள்ளனர். கடந்த 19 ஆம் தேதி ஹரியின் சகோதரி தனது தந்தையிடம் பேசியதாகக் கூறப்பட்ட நிலையில் பின்பு அவர் சடலமாக மீட்கப்பட்டு உள்ளார். இந்தச் சம்பவம் பெங்களூரு பகுதியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments