ஹோலி கொண்டாடிய சிலமணி நேரத்தில் சீரியல் நடிகை பலி: அதிர்ச்சி தகவல்

  • IndiaGlitz, [Monday,March 21 2022]

ஹோலி பண்டிகை கொண்டாடிய சில மணி நேரத்தில் பிரபல தொலைக்காட்சி நடிகை ஒருவர் கார் விபத்தில் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .

பிரபல தெலுங்கு தொலைக்காட்சி மற்றும் வெப்தொடர் நடிகை காயத்ரி. இவர் கடந்த 18ஆம் தேதி தனது ஆண் நண்பருடன் ஹோலி பண்டிகையை கொண்டாடிவிட்டு வீட்டிற்கு திரும்பினார். காரை அவரது ஆண் நண்பர் ரோகித் என்பவர் ஓட்டியதாகவும், மேலும் இருவரும் மது அருந்தியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் திடீரென கார் ரோகித்தின் கட்டுப்பாட்டை மீறி மகேஸ்வரி என்ற பெண்ணின் மீது மோதியதாகவும் இந்த விபத்தில் மகேஸ்வரி மற்றும் காரில் இருந்த காயத்ரி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காயத்ரியின் ஆண் நண்பர் ரோகித் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இதனை அடுத்து மூன்று பேர்களை பலிகொண்ட இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். தெலுங்கு சின்னத்திரையுலகின் முன்னணி நடிகையான காயத்ரியின் மறைவை அடுத்து திரை உலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

More News

தளபதி என்னை ஒரு நாள் கூப்பிடுவார்: நம்பிக்கையுடன் காத்திருக்கும் பிரபல இயக்குனர்!

தளபதி விஜய் என்னை ஒருநாள் கூப்பிடுவார் என நம்பிக்கையோடு காத்திருப்பதாக பிரபல இயக்குனர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். 

நெகிழ்ச்சியோடு முத்தமிட்ட நடிகை ஜான்வி கபூர்… யாருக்குத் தெரியுமா?

பாலிவுட் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக இருந்துவரும் போனி கபூர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவி தம்பதிகளின் மூத்த

நீங்க மட்டும் அவன் குறுக்க போயிடாதீங்க சார்....: யாஷின் 'கே.ஜி.எஃப் 2' மாஸ் பாடல்!

பிரபல கன்னட நடிகர் யாஷ் நடித்த 'கே.ஜி.எஃப் 2' திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

மைக் மோகன் ரீஎண்ட்ரியாகும் படத்தின் ஆச்சரியமான தகவல்

கடந்த 90களில் காலத்தால் அழியாத பல காதல் திரைப்படங்களில் நடித்த மைக் மோகன் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் 'ஹரா' என்ற திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும்

ஐஸ்வர்யா ரஜினியின் அடுத்த திரைப்படத்தில் டுவிஸ்ட்:  ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான 'பயணி' என்ற மியூசிக் வீடியோ சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது