விஜய் பாணியில் சந்தானம் அடுத்த படம்... அதிகாரபூர்வ அறிவிப்பு!

  • IndiaGlitz, [Sunday,January 22 2023]

தமிழ் திரை உலகின் மாஸ் நடிகரான விஜய்யின் ’வாரிசு’ திரைப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் சந்தானம் நடிக்கும் அடுத்த திரைப்படத்தையும் பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் தெலுங்கு தயாரிப்பாளர்கள் தற்போது தமிழ் திரை உலகின் மீது தங்கள் கவனத்தை திருப்பி உள்ளனர் என்பதும் விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களை தெலுங்கு தயாரிப்பாளர்கள் தயாரித்து வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் சந்தானம் நடிக்கும் அடுத்த திரைப்படத்தையும் பிரபல தெலுங்கு நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு திரை உலகில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ’ஓ பேபி’, ‘கார்த்திகேயா 2’ உள்ளிட்ட படங்களை தயாரித்த பீப்பிள் மீடியா பேக்டரி நிறுவனம் தற்போது சந்தானம் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படத்தின் முக்கிய அப்டேட் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நடிகர் சந்தானம் நடித்துள்ள ’கிக்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் இந்த படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.