அஜித், விஜய்யின் அடுத்த படங்களை தயாரிப்பது தெலுங்கு பட நிறுவனங்களா?

  • IndiaGlitz, [Wednesday,January 24 2024]

தமிழ் திரையுலகின் மாஸ் நடிகர்களான அஜித், விஜய்யை வைத்து படம் தயாரிக்க தமிழகத்தில் உள்ள தயாரிப்பு நிறுவனங்கள் காத்திருக்கும் நிலையில் அஜித், விஜய் ஆகிய இருவருடைய அடுத்த படங்களை தயாரிப்பது தெலுங்கு பட நிறுவனங்கள் தயாரிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அஜித் தற்போது லைகா தயாரிப்பில் உருவாகி வரும் ’விடாமுயற்சி’ என்ற படத்தில் நடித்து வரும் நிலையில் அவருடைய அடுத்த படத்தை பிரபல தெலுங்கு பட நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனம் இருப்பதாகவும் இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க இருப்பதாகவும் வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது விஜய் நடிக்க உள்ள அடுத்த திரைப்படத்தையும் பிரபல தெலுங்கு படம் நிறுவனமான டிவிவி என்ற நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிறுவனம் எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் உருவான ’ஆர்ஆர்ஆர்’ உட்பட பல பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் ஏற்கனவே பிரபல தெலுங்கு பட தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் ’வாரிசு’ படத்தில் நடித்த நிலையில் தற்போது மீண்டும் தெலுங்கு பட தயாரிப்பு நிறுவனத்திற்கு ஒரு படம் நடித்து கொடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.

அஜித் விஜய் ஆகிய இரு மாஸ் நடிகர்களின் அடுத்த படங்களை தெலுங்கு பட தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிக்க இருப்பதாக கூறப்படுவது தமிழ் திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

ஜிவி பிரகாஷின் 'ரிபெல்' சென்சார் தகவல்.. ரிலீஸ் எப்போது?

ஜிவி பிரகாஷ் நடித்த 'ரிபெல்' என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

நீண்ட இடைவெளிக்கு பின் பிரபுவை சந்தித்த உடன் நடித்த நடிகைகள்.. வைரலாகும் புகைப்படங்கள்..!

நடிகர் பிரபுவுடன் நடித்த இரண்டு நடிகைகள் நீண்ட இடைவெளிக்கு பின்னர் அவரை சந்தித்து புகைப்படம் எடுத்து கொண்ட நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.  

திருமணமான அவருடன் டேட்டிங் இல்லை: வேறொருவரை காதலிக்கிறேன்: கங்கனா ரனாவத்

நடிகை கங்கனா ரனாவத் பிரபல தொழிலதிபர் ஒருவருடன் டேட்டிங்கில் இருப்பதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியான நிலையில் 'அவருக்கு திருமணம் ஆகிவிட்டது

கடும் குளிர்.. நோ மேக்கப்.. ரிஷிகேஷில் நடிகை ரம்யா பாண்டியன்..!

 நடிகை ரம்யா பாண்டியன் ரிஷிகேஷ் சென்று உள்ள நிலையில் அங்கு கடுங்குளிரில் மேக்கப் இல்லாமல் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில்

சிம்புவுக்கு ஜோடியாகிறாரா தீபிகா படுகோன்? இன்னொரு ஹீரோயின் யார் தெரியுமா?

சிம்பு நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் இரண்டு நாயகிகள் நடிக்க இருப்பதாகவும் அவர்களில் ஒருவர் தீபிகா படுகோன் என்றும் கூறப்படுவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.