மெகா பட்ஜெட் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பாளருக்கு கொரோனா
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் தற்போது தெலுங்கு திரையுலக தயாரிப்பாளர் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பவன் கல்யாண் நடித்த ’கப்பார் சிங்’, ஜூனியர் என்டிஆரின் ’டெம்பர்’ உள்பட பல மெகா பட்ஜெட் படங்களை தயாரித்தவர் பண்ட்லா கணேஷ். இவர் மகேஷ்பாபுவின் ’போக்கிரி’ ’பிசினஸ்மேன்’ உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகரும் தயாரிப்பாளருமான பண்ட்லா கணேஷ் அடிக்கடி தனக்கு சொந்தமான கோழிப் பண்ணைகளுக்கு சென்று வந்ததாக தெரிகிறது. இதனை அடுத்து திடீரென அவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததாகவும் இதனை அடுத்து அவருக்கு கொரோனா சோதனை செய்தபோது பாசிடிவ் ரிசல்ட் வந்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் விரைவில் அவர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்புவார் என்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.
தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் தெலுங்கு திரையுலகினர் இடையே பெரும் பரபரப்பு இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout