போதை பொருள் வைத்திருந்ததாக பிரபல தயாரிப்பாளர் கைது.. பிரபல நடிகைக்கு தொடர்பா?

  • IndiaGlitz, [Friday,June 30 2023]

போதைப்பொருள் வைத்திருந்ததாக பிரபல தயாரிப்பாளர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த விவகாரத்தில் பிரபல நடிகை ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான கேபி சௌத்ரி என்பவரை போதைப்பொருள் வைத்திருந்ததாக போலீசார் கைது செய்தனர்

அவரது செல்போனை போலீசார் ஆய்வு செய்தபோது ஒரு சில நடிகைகளுடன் அவர் பலமுறை பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களில் ஒருவர் பிரபல நடிகை அஷு ரெட்டி என கூறப்படுகிறது.

இந்த நிலையில் தனக்கும் போதைப்பொருள் விவகாரத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என அஷு ரெட்டி வீடியோ வெளியிட்டுள்ளார். அதேபோல் கேபி சௌத்ரியுடன் எனக்கு தொடர்பில்லை என்றும் அதுமட்டுமின்றி தனக்கு செல்போனில் போனில் மிரட்டல்கள் வருகின்றன என்றும், என்னுடைய செல்போனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த விவகாரத்தில் தன் மீது அவதூறு பரப்பியவர்கள் மீது மானநஷ்ட வழக்கு தொடர இருக்கிறேன்'' என்றும் அவர் கூறியுள்ளார்.

More News

ஜெயம் ரவி வீட்டில் என்ன விசேஷம்? ஒட்டுமொத்த குடும்பமே கூடியிருக்குது..!

நடிகர் ஜெயம் ரவி மகனின் 13 வது பிறந்த நாள் சமீபத்தில் கொண்டாடப்பட்ட நிலையில் இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அவரது ஒட்டுமொத்த குடும்பமே கூடி இருந்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்

சேர வேண்டியவங்களோட சேர போற.. சிம்பு வெளியிட்ட 'ஸ்வீட் காரம் காப்பி' டிரைலர்..!

 ஜூலை 6ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக இருக்கும் 'ஸ்வீட் காரம் காபி' என்ற வெப்தொடரின் டிரைலரை நடிகர் சிம்பு தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த ட்ரைலர் வீடியோ தற்போது

விதார்த் நடிக்கும் ஹைப்பர்லிங்க் க்ரைம் த்ரில்லர் படம்.. பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு..!

Trending entertainment & White horse studios K. சசிகுமார்   தயாரிப்பில்,  அறிமுக இயக்குநர் சகோ கணேசன் இயக்கத்தில், விதார்த், கலையரசன், சந்தோஷ் பிரதாப், த்ரிகுண் ஆகியோர் நடிப்பில், ஹைப்பர்லிங்க் க்ரைம்

உங்களுக்கு யார் ஷேவ் பண்ணி விடுவாங்க? ஏடாகூடா கேள்விக்கு பிக்பாஸ் சனம் ஷெட்டியின் தரமான பதிலடி..!

 நடிகை சனம் ஷெட்டியிடம் ரசிகர் ஒருவர் உங்களுக்கு யார் ஷேவ் பண்ணி விடுவார்கள் என்ற கேள்விக்கு அவர்  தரமான பதிலடி கொடுத்துள்ளார்.

விஜய், அஜித்தை அடுத்து இன்னொரு மாஸ் பிரபலத்துடன் இணையும் த்ரிஷா ..!

தமிழ் திரையுலகில் கடந்த 20 ஆண்டுகளாக நாயகி ஆக நடித்து வரும் த்ரிஷா சமீபத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு ரவுண்டு வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்.