ஸ்ருதிஹாசனின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Thursday,August 11 2016]

மலையாளத்தில் சூப்பர் ஹிட் ஆன 'பிரேமம்' திரைப்படம் தெலுங்கிலும் அதே டைட்டிலில் உருவாகி வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீடு வரும் 24ஆம் தேதியும், இந்த படம் வரும் செப்டம்பர் 9ஆம் தேதியும் ரிலீஸ் ஆகும் என்றும் இந்த படத்தின் தயாரிப்பாளர் சூர்யதேவரா நாகவம்சி தெரிவித்துள்ளார்.
'பிரேமம்' படத்தில் சாய்பல்லவி நடித்த முக்கியமான கேரக்டரான 'மலர்' டீச்சர் கேரக்டரில் ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். நாகசைதன்யா, அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபாஸ்டியன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தை Chandu Mondeti இயக்கியுள்ளார்.
'வேதாளம்' படத்தை அடுத்து ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளிவரும் அடுத்த படம் இது என்பதால் இந்த படத்தை தெலுங்கு ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இந்த படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கின்றனர்.