பில்கேட்ஸை சந்தித்த மாஸ் நடிகர்: என்ன சொல்லியிருக்கார் பாருங்க!
Send us your feedback to audioarticles@vaarta.com
தென்னிந்திய திரையுலகின் மாஸ் நடிகர் உலக பணக்காரர்களில் ஒருவராகிய மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பில் கேட்ஸ் அவர்களை சந்தித்து உள்ள புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு, பழம்பெரும் தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவின் மகன் என்பதும் இவரது திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் தெலுங்கு திரையுலகில் வெற்றி பெற்று வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் மகேஷ்பாபு நடித்த ’சர்க்காரு வாரி பாட்டா’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சற்று முன் மகேஷ் பாபு தனது டுவிட்டர் பக்கத்தில் உலக பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் அவர்களை சந்தித்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்
இந்த புகைப்படத்தில் அவர், ‘இந்த உலகம் கண்ட மிகப்பெரிய தொலைநோக்கு பார்வையாளர்களில் ஒருவர் என்றும் அதைவிட மிகவும் அடக்கமானவர் என்றும் அவரை சந்தித்தது உண்மையிலேயே ஒரு உத்வேகத்தை அளித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் பில்கேட்ஸ் அவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை மகேஷ் பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில் இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்து வருகின்றன
இந்த நிலையில் நடிகர் மகேஷ்பாபு அடுத்ததாக பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் என்பதும், இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Had the pleasure of meeting Mr. @BillGates! One of the greatest visionaries this world has seen... and yet the most humble! Truly an inspiration!! pic.twitter.com/3FN2y7bIoc
— Mahesh Babu (@urstrulyMahesh) June 29, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com