மாஸ் நடிகருக்கு கொரோனா பாதிப்பு: குடும்பத்துடன் தனிமைப்படுத்தி கொண்டதால் பரபரப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் தினந்தோறும் இந்தியாவில் 4 லட்சம் பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம். குறிப்பாக திரையுலகினர் கொரோனாவால் பாதிக்கப்படுவதும் அவர்களில் ஒரு சிலர் கொரோனாவுக்கு பலியாகி வருவதுமான சம்பவங்கள் திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது
ஏற்கனவே பல திரையுலக பிரபலங்களுக்கு கொரோனா பாதித்த நிலையில் தற்போது மாஸ் நடிகர் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. ஆம் தெலுங்கு திரையுலகின் மாஸ் நடிகரான ஜூனியர் என்டிஆர் அவர்களுக்கு தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் தனது குடும்பத்துடன் தனிமைப்படுத்தி கொண்டதாக டுவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்
ஆனால் அதே நேரத்தில் யாரும் பயப்படவேண்டாம் என்றும் தான் நலமாக இருப்பதாகவும் தானும் தன்னுடைய குடும்பத்தினரும் கொரனோ வைரஸ் விதிமுறைகளை பின்பற்றி வருவதாகவும் தங்களை மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளுமாறும் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும்படியும் அவர் குறிப்பிட்டுள்ளார்
இந்த நிலையில் ஜூனியர் என்டிஆர் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் விரைவில் நலமாக வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
I’ve tested positive for Covid19. Plz don’t worry,I’m doing absolutely fine. My family & I have isolated ourselves & we’re following all protocols under the supervision of doctors. I request those who’ve come into contact with me over the last few days to pl get tested. Stay safe
— Jr NTR (@tarak9999) May 10, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com