close
Choose your channels

தமன் இசை பிடிக்கவில்லை என கூறினாரா பிரபல ஹீரோ?

Saturday, November 20, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தெலுங்கு திரை உலகின் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் தமனின் பின்னணி இசை தனக்கு பிடிக்கவில்லை என பிரபல ஹீரோ ஒருவர் கூறியிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழில் ஷங்கர் இயக்கிய ’பாய்ஸ்’ என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமான தமன், அதன்பின் தெலுங்கு திரையுலகில் இசையமைப்பாளராக மாறி உள்ளார் என்பதும் தற்போது தெலுங்கு திரையுலகில் நம்பர் ஒன் இசையமைப்பாளர் அவர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமன் இசையமைப்பில் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘தக் ஜெகதீஷ்’. இந்த படத்திற்கு தமன் பாடல்கள் மற்றும் இசை அமைத்திருந்த நிலையில் இந்த படத்தின் பின்னணி இசை தனக்கு பிடிக்கவில்லை என ஹீரோ நானி கூறியதாக தெரிகிறது. இதனை அடுத்து அந்த படத்தில் இருந்து தமன் விலகி விட்டார் என்பதும் அதன் பின்னர் இந்த படத்தில் கோபி சுந்தர் இசையமைப்பாளராக இணைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ள தமன், இரண்டு பாடல்களை கம்போஸ் செய்து முடித்த பின்னர் எனது பின்னணி இசை முழுமையாக பிடிக்கவில்லை என்று நானி தெரிவித்ததாக செய்திகள் வெளியானது. அதனால் அந்த படத்தில் இருந்து விலகினேன். மற்ற படங்களுக்கு இசையமைப்பது போல தான் அந்த படத்திற்கு முழு ஈடுபாட்டுடன் பின்னணி இசை அமைத்தேன். நானிக்கு ஏன் பிடிக்காமல் போனது என தெரியவில்லை என அவர் கூறியுள்ளார்.

விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த படம் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வரும் தமனின் பின்னணி இசை தனக்கு பிடிக்கவில்லை என நானி கூறியது தெலுங்கு திரையுலகில் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment