ரஜினி, அஜித், விஜய்க்கு திடீரென செக் வைத்த தெலுங்கு திரையுலகம்: என்ன காரணம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகின் மாஸ் நடிகர்களான ரஜினிகாந்த், அஜீத், விஜய் ஆகியோர்களின் படங்களின் படப்பிடிப்பு பெரும்பாலும் ஐதராபாத்தில் தான் நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் செட் அமைக்கப்பட்டு தான் ரஜினி, விஜய், அஜித் படங்கள் படமாக்கப்பட்டு வருவதாக தெரிகிறது
இந்த நிலையில் தெலுங்கு திரையுலகம் திடீரென வேலைநிறுத்தம் செய்ய திட்டமிட்டுள்ளதால் ரஜினி, அஜித், விஜய் படங்களின் படப்பிடிப்பு தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது
கொரோனா காலத்திற்கு பிறகு தெலுங்கு திரையுலகின் தயாரிப்பாளர்கள் நிலை மிக மோசமாக உள்ளதாகவும் திரைப்பட தயாரிப்பாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்க வேண்டியது முக்கியமானது என்றும் எனவே ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகளை நிறுத்திவிட்டு இது குறித்து விவாதிக்க வேண்டும் என்று மீண்டும் தெலுங்கு திரையுலகின் சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் தெலுங்கு மாநிலங்களில் வேலை நிறுத்தம் உறுதி செய்யப்பட்டால் ரஜினியின் ’ஜெயிலர், விஜய்யின் ’வாரிசு’, அஜித்தின் ‘ஏகே 61’ ஆகிய படங்களின் படப்பிடிப்பு தள்ளிப் போக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout