அந்த நாலுபேர் தான் எல்லாத்துக்கும் காரணம்: ஸ்ரீரெட்டி அதிர்ச்சி தகவல்

  • IndiaGlitz, [Wednesday,April 11 2018]

தெலுங்கு திரையுலகில் கடந்த சில நாட்களாக பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் நடிகை ஸ்ரீரெட்டி என்பது தெரிந்ததே. வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் திரையுலக பிரபலங்கள் குறித்து தகவல்களை போட்டுடைத்த ஸ்ரீரெட்டி பின்னர் தான் நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டதற்கு அரைநிர்வாண போராட்டம் நடத்தினார். ஒரு தயாரிப்பாளரின் மகன் தன்னை சீரழித்துவிட்டதாக கூறிய அவர் அதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாக கூறி அனைவரையும் அதிர வைத்தார்

இந்த நிலையில் தற்போது தெலுங்கு திரையுலகை நான்கு குடும்பங்கள் ஆட்டி வைப்பதாகவும், அந்த குடும்பங்களின் வாரிசுகளை தவிர வேறு யாரேனும் வளர்ந்து வந்தால் அவர்கள் குறித்து தவறான தகவல்களை பரப்பி அவர்களை நாசமாக்குவதாகவும் தற்போது திடுக்கிடும் குற்றச்சாட்டு ஒன்றை கூறியுள்ளார். மேலும் தெலுங்கு திரையுலகில் அவ்வப்போது நடந்து வரும் தற்கொலைகளுக்கும் இந்த நான்கு குடும்பங்கள் தான் காரணம் என்றும் ஸ்ரீரெட்டி கூறியுள்ளார்.

தன்னை சமாதானப்படுத்த கோடிக்கணக்கில் பணம் கொடுக்க தெலுங்கு திரையுலகினர் முன்வந்ததாகவும், ஆனால் அதற்கு தான் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் கூறிய ஸ்ரீரெட்டி, எனக்காக மட்டுமின்றி அனைத்து நடிகைகளுக்காகவும் தான் போராடி இருட்டில் இருக்கும் பல உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வருவேன் என்றும் ஸ்ரீரெட்டி கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

More News

சிஎஸ்கே உடை இலவசம், ஒரு டம்ளர் தண்ணீர் ரூ.10: பகல்கொள்ளையில் சேப்பாக்கம் மைதானம்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள போட்டிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதை அடுத்து பார்வையாளர்களுக்கு கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.

ஐபிஎல் போராட்டம்: பாரதிராஜா-வைரமுத்து உள்பட பலர் கைது

ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சியினர் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை அண்ணா சாலையில் இயக்குனர்கள் பாரதிராஜா, சீமான், வெற்றிமாறன், அமீர், கவிஞர் வைரமுத்து

தோனியின் ரசிகர் மீது அரசியல் கட்சியினர் தாக்குதல்: பெரும் பரபரப்பு

சென்னையில் இன்று இன்னும் சற்று நேரத்தில் ஐபிஎல் போட்டி ஆரம்பமாகவுள்ளது. இந்த நிலையில் ஐபிஎல் போட்டியை நடத்த விடாமல் தடுக்க பல அரசியல் கட்சியின் தலைவர்களும், தொண்டர்களும், அண்ணா சாலையில்

அஜித் குறித்து விஜய் தந்தை கூறியது என்ன தெரியுமா?

'அஜித் இன்னும் பல பிறந்த நாள்களை கொண்டாடி அவரது வாழ்க்கையும், தொழிலும் குடும்பமும் செழிப்பாக இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்

சென்னை அண்ணா சாலையின் தற்போதைய நிலவரம்:

அண்ணாசாலையில் ஐ.பி.எல். டிக்கெட்டுகளை எரித்தும், பிரதமர் மோடி படத்தை அடித்தும், தீயிட்டு கொளுத்தியும் போராட்டம்.