தமிழில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கிளைமாக்ஸ்.. தெலுங்கு 'எதிர்நீச்சல்' முடிவு என்ன?
Send us your feedback to audioarticles@vaarta.com
சன் டிவியில் ஒளிபரப்பான ‘எதிர்நீச்சல்’ சீரியல் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த சீரியலின் தெலுங்கு பதிப்பும் இந்த வாரம் முடிவடைந்துள்ளது. ஆனால் தமிழைப் போல் இல்லாமல் முற்றிலும் வேறுபட்ட கிளைமாக்ஸ் தெலுங்கில் உள்ளது என்பது தெலுங்கு ரசிகர்களுக்கு ஆச்சரியமான ஒன்றாகும்.
சன் டிவியில் 740 எபிசோடுகளுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த ‘எதிர்நீச்சல்’ சீரியல் சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் சன் டிவியில் ஆரம்பித்த ஒரு சில மாதங்களில் இதே சீரியல் ‘உப்பென்னா’ என்ற டைட்டிலில் தெலுங்கிலும் ஒளிபரப்பானது என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில் தமிழ் ’எதிர்நீச்சல்’ கிளைமாக்ஸில் குணசேகரனை ஜெயிலுக்கு அனுப்பிவிட்டு குடும்பத்தில் உள்ள பெண்களுக்கும் அப்பத்தா வாழ்த்து தெரிவித்து, ‘வாழ்க்கையில் நீங்கள் இன்னும் நிறைய குணசேகரன்களை பார்க்க வேண்டி இருக்கும், அதற்கெல்லாம் தயங்காமல் முன்னேறி போய்க்கொண்டே இருக்க வேண்டும், உங்களுக்கு தடையாக யார் வந்தாலும் அவர்களை அடித்து வீழ்த்திவிட்டு, உங்கள் சாதனைகளால் அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டும், என்று அறிவுரை கூறியிருப்பார். அதேபோல் கிளைமாக்ஸில் அண்ணனுக்கு ஆதரவாக மீண்டும் வில்லன்களாக குணசேகரனின் சகோதரர்கள் மாறி இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தெலுங்கு ’எதிர்நீச்சல்’ சீரியல் தற்போது முடிவடைந்துள்ள நிலையில் அந்த சீரியலில் குணசேகரன் உள்பட அவருடைய தம்பிகள் அனைவரும் தங்களுடைய மனைவிமார்களை புரிந்து கொண்டு அவர்களுடைய கனவுக்கு துணையாக இருப்பது போன்று கிளைமாக்ஸ் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டு பெண்கள் அனைவரும் வேலைக்கு செல்லும்போது அவர்களுக்கு கணவன்மார்கள் மற்றும் மாமியார் டாட்டா காட்டி சந்தோசமாக வழி அனுப்பி வைப்பது போன்று கிளைமாக்ஸ் வைக்கப்பட்டுள்ளது. இந்த கிளைமாக்ஸ் காட்சிகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com