எஸ்.எஸ்.ராஜமெளலியை கொலை செய்ய திரையுலகில் திட்டமா? பிரபல இயக்குனரின் அதிர்ச்சி பதிவு!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியை கொலை செய்ய திரை உலகில் ஒரு குரூப் திட்டமிட்டுள்ளதாக பிரபல இயக்குனர் ஒருவர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
’பாகுபலி’ ’பாகுபலி 2’ ஆகிய திரைப்படங்கள் மூலம் உலகம் முழுவதும் புகழ்பெற்றவர் எஸ்.எஸ்.ராஜமெளலி. அவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படம் சமீபத்தில் கோல்டன் குளோப் விருதை பெற்றது மட்டுமின்றி ஆஸ்கார் விருது பட்டியலிலும் உள்ளது என்பதும் அந்த படம் ஆஸ்கார் விருதை பெறுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் பிரபல தெலுங்கு இயக்குனர் ராம்கோபால் வர்மா தனது டுவிட்டரில், ‘ இந்திய சினிமாவில் யாரும் எட்டாத ஒரு இடத்தை எஸ்.எஸ்.ராஜமெளலி எட்டியுள்ளார், அவரது வளர்ச்சி நினைத்து கூட பார்க்க முடியாதது என்றும் பதிவு செய்துள்ளார்.
மேலும் ’ஷோலே’ படத்தை இயக்கிய ரமேஷ் சிப்பி போன்ற ஜாம்பவான்களை எல்லாம் எஸ்.எஸ்.ராஜமெளலி மிஞ்சிவிட்டார் என்றும் அவருக்கு தலை வணங்குகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுவரை நன்றாக சென்று கொண்டிருந்த அவரது ட்வீட் அதன் பிறகு தான் சர்ச்சைக்கு உள்ளாகியது. எஸ்.எஸ்.ராஜமெளலி மீது நான் உள்பட பலர் பொறாமைப்படுகின்றனர். எனவே திரைப்பட தயாரிப்பாளர்கள் அவரை கொலை செய்ய ஒரு குரூப்பை உருவாக்கி உள்ளனர், அந்த குழுவில் நானும் ஒரு பகுதி, எனவே நீங்கள் உங்கள் பாதுகாப்பை பலப்படுத்திக் கொள்ளுங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த ட்விட்டை அவர் நகைச்சுவையாக கூறினாலும் எஸ்.எஸ்.ராஜமெளலி ரசிகர்கள் இந்த டுவீட்டுக்கு கடும் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.
Hey @ssrajamouli U basically SURPASSED every film maker from #KaAsif who made #MughaleAzam till #RameshSippy who made #Sholay and also the likes of Aditya Chopras, Karan Johars and the bhansalis of India and I want to suck ur little toe for that https://t.co/KCgN0u2eJa
— Ram Gopal Varma (@RGVzoomin) January 23, 2023
And sir @ssrajamouli , please increase ur security because there is a bunch of film makers in india who out of pure jealousy formed an assassination squad to kill you , of which I am also a part ..Am just spilling out the secret because I am 4 drinks down
— Ram Gopal Varma (@RGVzoomin) January 23, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com