செல்பி எடுத்து தற்கொலை செய்து கொண்ட பிரபல காமெடி நடிகர்
Send us your feedback to audioarticles@vaarta.com
தெலுங்கு திரையுலகின் பிரபல காமெடி நடிகர் விஜய்சாய் அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்துள்ள செய்தி தெலுங்கு திரையுலகை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
32 வயதான காமெடி நடிகர் விஜய்சாய் கடன் பிரச்சனை காரணமாகவும், மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்ற காரணத்தாலும் கடந்த சில நாட்களாகவே மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. மனைவியுடன் ஒரே மகளும் சென்றுவிட்டதால் மகளின் பிரிவும் இவரை வாட்டியுள்ளதாகவும், இதன் காரணமாக அவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
நடிகர் விஜய்சாய் தற்கொலைக்கு முன்னர் செல்பி வீடியோ ஒன்றை எடுத்துள்ளதாகவும், இந்த வீடியோவை கைப்பற்றிய போலீசார், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் தன்னுடைய தற்கொலைக்கு தனது மனைவி, அவரது வழக்கறிஞர், இயக்குநர் சசிதர் ஆகியோர்தான் காரணம் என அந்த செல்பி வீடியோவில் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் விஜய்சாய் தற்போது தயாராகி வரும் பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'நடிகையர் திலகம்' படத்தில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments