செல்பி எடுத்து தற்கொலை செய்து கொண்ட பிரபல காமெடி நடிகர்

  • IndiaGlitz, [Tuesday,December 12 2017]

தெலுங்கு திரையுலகின் பிரபல காமெடி நடிகர் விஜய்சாய் அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்துள்ள செய்தி தெலுங்கு திரையுலகை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

32 வயதான காமெடி நடிகர் விஜய்சாய் கடன் பிரச்சனை காரணமாகவும், மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்ற காரணத்தாலும் கடந்த சில நாட்களாகவே மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. மனைவியுடன் ஒரே மகளும் சென்றுவிட்டதால் மகளின் பிரிவும் இவரை வாட்டியுள்ளதாகவும், இதன் காரணமாக அவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

நடிகர் விஜய்சாய் தற்கொலைக்கு முன்னர் செல்பி வீடியோ ஒன்றை எடுத்துள்ளதாகவும், இந்த வீடியோவை கைப்பற்றிய போலீசார், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் தன்னுடைய தற்கொலைக்கு தனது மனைவி, அவரது வழக்கறிஞர், இயக்குநர் சசிதர் ஆகியோர்தான் காரணம் என அந்த செல்பி வீடியோவில் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் விஜய்சாய் தற்போது தயாராகி வரும் பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'நடிகையர் திலகம்' படத்தில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தகவல் பரிமாற்றங்களுக்காக சரத்குமார் வெளியிட்ட செயலி

சமீபத்தில் கமல்ஹாசன், விஷால் ஆகியோர் தங்களுடைய செயலிகளை வெளியிட்ட நிலையில் தற்போது நடிகர் சரத்குமார் அவர்களும் ASK என்னும் செயலியை வெளியிட்டுள்ளார்

பொன்வண்ணன் ராஜினாமா எதிரொலி: நடிகர் சங்கத்தின் அவசர அறிக்கை

விஷாலின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று சங்கத்தின் துணைத்தலைவர் பொன்வண்ணன் ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நடிகர் சங்கத்தின் அவசர அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது

அட்டகாசமாக வெளியானது 'காலா'வின் செகண்ட் லுக்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய 'கபாலி' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது

இன்று நள்ளிரவு 12 மணிக்கு சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாள் நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் ரஜினி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் இன்று நள்ளிரவு 12 மணிக்கு ரஜினிகாந்த் நடித்து வரும் 'காலா'

பகலில் காண்டம் விளம்பரம் வேண்டாம்: செய்தி ஒளிபரப்புத்துறை அமைச்சகம் அறிவுரை

காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை காண்டம் விளம்பரங்களை ஒளிபரப்ப வேண்டாம் என தொலைக்காட்சி சேனல்களுக்கு மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.