தெலுங்கு 'அசுரன்' படத்திற்கு வந்த சோதனை: ரசிகர்கள் அதிருப்தி!
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தயாரிப்பில் உருவான ‘அசுரன்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கான ’நாரப்பா என்ற படத்தில் தனுஷ் கேரக்டரில் வெங்கடேஷ் நடித்துள்ளார் என்பதும், மஞ்சுவாரியர் வேடத்தில் பிரியாமணியும், அம்மு அபிராமி நடத்தும் அமலா பாலும் நடித்துள்ளனர் என்பதும் தெரிந்ததே.
இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருந்தாலும் திரையரங்குகள் திறக்கப்படாததால் ரிலீஸ் செய்ய முடியாத நிலை உள்ளது. மேலும் மூன்றாவது அலை விரைவில் வரும் என கூறப்படுவதால் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்றும் தெரியவில்லை.
இந்த நிலையில் வேறு வழியின்றி ’நாரப்பா’ திரைப்படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழில் மாபெரும் வெற்றி பெற்ற இந்தப் படம் தெலுங்கில் திரையரங்குகளில் வெளியானால் அதே வெற்றியைப் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ஓடிடியில் வெளியாக இருப்பதாக வரும் செய்திகள் வெங்கடேஷ் ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments