close
Choose your channels

சமந்தாவுக்கு பதில் இந்த பிரபல நடிகையா? 'புஷ்பா 2' ஐட்டம் பாடலின் பிரமாண்டம்..!

Wednesday, January 17, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா’ என்ற திரைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. ’புஷ்பா’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது வசூலில் சாதனை செய்தது என்பது தெரிந்தது. ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தின் வெற்றிக்கு சமந்தா நடனமாடிய ’ஊ சொல்றியா மாமா, ஊஊ சொல்றியா மாமா’ என்ற பாடலும் காரணம் என்பதும் இந்த பாடலில் நடனம் ஆடுவதற்காகவே ஒரு பெரிய தொகையை சமந்தாவுக்கு கொடுக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது ’புஷ்பா 2’ படத்திலும் ஒரு ஐட்டம் பாடல் இடம்பெறப் போவதாகவும் அதில் சமந்தா நடனமாட முடியாது என்று கூறிவிட்டபடியால் சில பிரபல நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல் படி தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக இருக்கும் ஸ்ரீ லீலா ’புஷ்பா’ படத்தின் ஐட்டம் பாடலுக்காக நடனமாட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் வெளியான ’குண்டூர் காரம்’ உள்பட பல சூப்பர் ஹிட் படங்களில் தொடர்ச்சியாக ஸ்ரீ லீலா நடித்து வரும் நிலையில் அவர் ’புஷ்பா 2’ படத்தில் ஒரு ஐட்டம் பாடல் நடனமாட இருக்கிறார் என்ற தகவல் தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment
Related Videos