போதைப்பொருள் விவகாரம்: மேலும் ஒரு நடிகை கைது!

போதைப்பொருள் விவகாரத்தில் ஏற்கனவே ஒரு சில நடிகைகள் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் தற்போது மேலும் ஒரு தெலுங்கு நடிகை கைது செய்யப்பட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

போதைப்பொருள் விவகாரத்தில் பாலிவுட் நடிகை ரியா சக்கரவர்த்தி மற்றும் கன்னட நடிகைகள் சஞ்சனா கல்ராணி, ராகினி திவேதி ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த விவகாரத்தில் மேலும் சிலர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி மும்பையில் உள்ள மீரா ரோடு என்ற பகுதியில் உள்ள ஓட்டலில் திடீரென காவல்துறையினர் மற்றும் போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது தெலுங்கு நடிகை ஒருவரையும் போதைப்பொருள் தரகர் ஒருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுமார் 10 லட்சம் மதிப்புள்ள 400 கிராம் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே போதை பொருள் விவகாரத்தில் கன்னட மற்றும் பாலிவுட் நடிகைகள் சிலர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் தற்போது மேலும் ஒரு நடிகை கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் நடிகைகள் உள்பட மொத்தம் இதுவரை 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.