தமிழ் இசையமைப்பாளரிடம் கைகோர்க்கும் தெலுங்கு முன்னணி நடிகர்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தெலுங்கு திரையுலகில் எம்எம் கீரவாணி, தேவிஸ்ரீபிரசாத், தமன் உள்பட பல முன்னணி இசையமைப்பாளர்கள் இருக்கும் நிலையில் தெலுங்கு முன்னணி நடிகர்கள் பலர் தமிழ் இசை அமைப்பாளருடன் கைகோர்க்க உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
கமலஹாசன் நடித்து வரும் ’விக்ரம்’, ரஜினிகாந்த் நடிக்கவுள்ள ’தலைவர் 169’ விஜய் நடித்து முடித்துள்ள ’பீஸ்ட்’, அஜித் நடிக்கவுள்ள ‘அஜித் 62’, சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டான்’, தனுஷ் நடித்து வரும் ‘திருச்சிற்றம்பலம், விஜய்சேதுபதி நடித்துள்ள ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருபவர் இளம் இசையமைப்பாளர் அனிருத் .
இந்த நிலையில் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் ஒரு சில படங்களில் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே நான்கு தெலுங்கு படங்களுக்கு இசையமைத்து வரும் அனிருத், அடுத்த கட்டமாக ஜூனியர் என்டிஆர், ராம்சரண் தேஜா, விஜய் தேவரகொண்டா ஆகியோர்களின் அடுத்த படங்களுக்கும் இசையமைக்க ஒப்பந்தமாகி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகை போலவே தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு அனிருத் இசை அமைக்க ஒப்புக் கொண்டிருப்பதை அடுத்து அவர் விரைவில் பான் - இந்தியா இசையமைப்பாளர் ஆகிவிடுவார் என்று கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments