லிங்குசாமி ஹீரோவை வளைத்து போட்டாரா ஏ.ஆர்.முருகதாஸ்?

  • IndiaGlitz, [Tuesday,June 01 2021]

பிரபல இயக்குனர் லிங்குசாமி இயக்கி வரும் படத்தில் நடிக்கும் ஹீரோ ஒருவர்தான் ஏஆர் முருகதாஸ் இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ என்று கூறப்பட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

பிரபல இயக்குனர் ஏஆர் முருகதாஸ், விஜய்யின் ‘தளபதி 65’ திரைப்படத்தை இயக்க ஒப்பந்தமாகி இருந்தார். அதன் பின் திடீரென அந்த படத்தில் இருந்து அவர் விலகி விலகியதை அடுத்து தற்போது இயக்குனர் நெல்சன் ’தளபதி 65’ படத்தை இயக்கி வருகிறார்

இந்த நிலையிலே ஏஆர் முருகதாஸ் இயக்கவுள்ள அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்டது. சிவகார்த்திகேயன் உள்பட பலர் அவருடைய படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியானது

இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி ஏஆர் முருகதாஸ் படத்தில் தெலுங்கு திரையுலகின் இளம் நடிகர் ராம் பொத்தினேனி ஹீரோவாக நடிக்கவுளார் என்றும், ஏ.ஆர்.முருகதாஸ் கூறிய கதை அவருக்கு பிடித்து கொண்டதை அடுத்து மிக விரைவில் இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. தற்போது லிங்குசாமி இயக்கும் தெலுங்கு படத்தில் ராம் பொத்தினேனி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.