ஆடம்பர திருமணத்தை ரத்து செய்த பிரபல நடிகர்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜெயம் ரவி நடித்த ’ஜெயம்’ திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த படம் தெலுங்கில் அதே பெயரில் வெளியான படத்தின் ரீமேக் தான் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த தெலுங்கு ’ஜெயம்’ படத்தில் பிரபல நடிகர் நிதின் நாயகனாக நடித்திருந்தார் என்பதும், இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு தெலுங்கில் நிதினுக்கு வாய்ப்புகள் குவிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. ராம்கோபால் வர்மா இயக்கிய ’அக்யுத்’ என்ற இந்தி படத்தின் மூலம் நிதின் பாலிவுட்டிலும் காலடி எடுத்து வைத்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் ஹைதராபாத்தில் நடிகர் நிதினுக்கும் ஷாலினி என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்களது திருமணம் துபாயில் மிகவும் பிரமாண்டமாக ஏப்ரல் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த திருமணத்திற்காக தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர் நடிகைகள் அனைவரும் கலந்துகொள்ள அவர் ஏற்பாடு செய்திருந்தார்
இந்த நிலையில் திடீரென கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகமெங்கும் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து துபாயில் ஏற்பாடு செய்திருந்த ஆடம்பரத் திருமணத்தை நிதின் ரத்து செய்துவிட்டார். தற்போது அதே தேதியில் ஐதராபாத்தில் உள்ள தனது வீட்டிலேயே எளிமையாக திருமணத்தை நடத்த நிதின் முடிவு செய்திருப்பதாகவும் இந்த திருமணத்தில் அவருடைய நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் கொரோனா பரபரப்பு முடிந்தவுடன் ஹைதராபாத்தில் ஆடம்பரமாக திருமணம் வரவேற்பு ஒன்றை அவர் நடத்த திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com