நான் ராமனாக நடிக்க மாட்டேன்....! வாய்ப்பை மறுத்த பிரபல நடிகர்.....!

ஒரு மொழி படங்களில் கவனம் செலுத்தி வரும் நடிகர் மகேஷ் பாபு, ராமனாக நடிக்க வந்த வாய்ப்பை மறுத்துள்ளார்.

தங்கல் பட இயக்குனர் நித்தீஷ் திவாரி, ராமாயணத்தின் கதையை மையமாக வைத்து, ராமாயணா 3டி என்ற தலைப்பில் புதிய திரைப்படத்தை எடுக்கவுள்ளார். இந்தியில் பிரமாண்டமாக உருவாகவிருக்கும் இந்த 3டி படத்தில் ராவணனாக ரித்திக் ரோஷனும், சீதையாக தீபிகா படுகோனும் நடிக்கவுள்ளனர். இதில் ராமனாக நடிக்க மகேஷ் பாபுவிடம் கேட்ட பட்சத்தில், அவர் அந்த வாய்ப்பை மறுத்துவிட்டுள்ளார்.

இதற்கு காரணம் இவருக்கென தனிக்கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளை கொண்டவர். குறிப்பாக பிறமொழிப்படங்களிலும் , ரீமேக் செய்யும் படங்களிலும் இவர் நடிப்பதில்லை. விஜய் நடித்த துப்பாக்கி திரைப்படம் அவருக்கு பிடித்திருந்த போதிலும், அப்படத்தின் ரீமேக்கில் நடிக்க வாய்ப்பு கிடைத்த போதும் அவர் நடிக்கவில்லை. அதேபோல் பாதாள பைரவி என்ற படத்தை, இவரின் தந்தை இந்த காலகட்டத்திற்கு தகுந்தாற் போல் எடுக்கவேண்டும், அதில் தன் மகன் நடிக்கவேண்டும் என்று கூறிய நிலையில் அதையும் மறுத்துவிட்டார்.

இந்நிலையில் ராமாயணா படத்தில் ரித்திக் ரோஷன் இருப்பதாலும், மகேஷ் பாபு ராஜமௌலியின் அடுத்த படத்தில் கமிட் ஆன காரணத்தினாலும் இந்த வாய்ப்பை மறுத்துள்ளார். ராமன் கேரக்டருக்கு வேறு நடிகர்களை தேர்வு செய்யும் பணி தற்போது நடந்து வருகிறது.