தமிழக கவர்னராக பிரபல நடிகரின் உறவினர் நியமனமா?

  • IndiaGlitz, [Friday,January 06 2017]

தமிழக கவர்னராக இருந்த ரோசய்யா அவர்களின் பதவிக்காலம் சமீபத்தில் முடிந்த நிலையில் தற்போது தமிழகத்தின் பொறுப்பு கவர்னராக மகாராஷ்டிரா மாநில கவர்னர் வித்யாசகர் ராவ் செயல்பட்டு வருகிறார்.

கடந்த சில நாட்களாக தமிழகத்திற்கு புதிய கவர்னர் நியமனம் செய்யப்படவிருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் தற்போது இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தமிழகத்தின் புதிய கவர்னராக கிருஷ்ணம் ராஜூ நியமனம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இவர் ஒரு பிரபல தெலுங்கு நடிகர் மட்டுமின்றி தெலுங்கு சூப்பர் ஸ்டார் பிரபாஸின் நெருங்கிய உறவினர் என்பதும், கடந்த தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின்போது மத்திய அமைச்சராகவும் இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.