'வலிமை' படத்தின் வில்லனாகும் பிரபல தெலுங்கு நடிகர்!

  • IndiaGlitz, [Wednesday,February 05 2020]

தல அஜித் நடிப்பில் ஹெ.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உருவாகி வரும் ’வலிமை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் இரண்டுகட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் மூன்றாம்கட்ட படப்பிடிப்பு மும்பையிலும் அதனை அடுத்து சுவிட்சர்லாந்து நாட்டிலும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்த பின்னரும் இந்த படத்தின் நாயகி மற்றும் வில்லன் யார்? என்பது குறித்த தகவல்கள் வெளிவரவில்லை. இந்தப்படத்தில் பிரசன்னா உள்பட ஒரு சில நடிகர்கள் வில்லனாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட போதிலும் அந்த தகவல்கள் எதுவும் உறுதி செய்யப்படவில்லை

இந்த நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா என்பவர் இந்த படத்தின் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாகவும் ’வலிமை’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பில் அவர் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. நடிகர் கார்த்திகேயா ஏற்கனவே ’ஆர்எஸ் 100’ என்ற தெலுங்கு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தஞ்சை குடமுழுக்கை தடுக்க சென்ற பிரபல இயக்குனர் கைது!

தஞ்சை பெரிய கோவிலில் 23 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று குடமுழுக்கு விழா நடைபெற்று வருகிறது. இந்த குடமுழுக்கு விழாவில் தமிழில் மட்டுமே மந்திரம் சொல்ல வேண்டும்

வெப்சீரீஸில் லட்சுமிராய்: டாப்லெஸ் புகைப்படத்தால் பரபரப்பு

திரைப்படத்திற்கு இணையாக தற்போது வெப்சீரிஸ்களும் தயாரிக்கப்பட்டு வருகிறது என்பதும் இந்த வெப்சீரிஸ்களில் முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது 

தனுஷூக்கு ஜோடியாகும் மணிரத்னம் பட நாயகி!

தனுஷ் நடித்த 'அசுரன்' மற்றும் 'பட்டாஸ்'ஆகிய இரண்டு திரைப்படங்களும் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் அவர் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 'சுருளி' என்ற படத்தில்

இந்தியில் ரீமேக் ஆகும் தல அஜித்தின் சூப்பர்ஹிட் படம்

கடந்த சில ஆண்டுகளாக தமிழ் திரைப்படங்கள் ஹிந்தியில் ரீமேக் ஆகி வருவதை பார்த்து வருகிறோம். ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா' முதல் கார்த்தியின் 'கைதி' வரை பல  தமிழ் திரைப்படங்கள்

பிரபல நடிகர் யோகிபாபுவுக்கு திருமணம்: வைரலாகும் புகைப்படம்

யோகிபாபு திருமணம் செய்ய அவரது குடும்பத்தினர் பெண் பார்த்து வந்த நிலையில் சமீபத்தில் மஞ்சு பார்கவி என்ற பெண் யோகிபாபுவுக்கு நிச்சயிக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்தது