சென்னை மக்களுக்காக உண்டியல் ஏந்தும் தெலுங்கு நடிகர்கள்

  • IndiaGlitz, [Saturday,February 06 2016]

கடந்த ஆண்டு இறுதியில் சென்னையில் ஏற்பட்ட கனமழை மற்றும் பெருவெள்ளம் காரணமாக லட்சக்கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு கோலிவுட் திரையுலகினர் மட்டுமின்றி அண்டை மாநிலத்தை சேர்ந்த திரையுலகினர்களும் பெருமளவு நிதியளித்தனர்.


குறிப்பாக தெலுங்கு திரையுலகை சேர்ந்த பிரபாஸ் ரூ.15 லட்சம், மகேஷ்பாபு ரூ.10 லட்சம், ரவிதேஜா ரூ.5 லட்சம், கல்யாண் ராம் ரூ.5 லட்சம், சாய்தரம் தேஜா ரூ.3 லட்சம், வருண் தேஜா ரூ.3 லட்சம் என வாரி வழங்கிய நிலையில் நாளை பிரபல நடிகர், நடிகைகள் சென்னை வெள்ள நிவாரணத்திற்காக உண்டியல் ஏந்தி வசூல் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

நாளை மாலை 4 மணி முதல் இரவு 7மணி வரை ஐதராபாத்தில் உள்ள பிரபல வணிக வளாகங்களில் தெலுங்கு திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகர், நடிகைகள் பத்து பேர் உண்டியல் ஏந்தி நிதி வசூல் செய்யவுள்ளதாகவும், அந்த பணத்தை சென்னை வெள்ள நிவாரணத்திற்கு அனுப்பவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

More News

விமல்-நந்திதாவின் 'அஞ்சல' ரிலீஸ் தேதி அறிவிப்பு

கடந்த 2015ஆம் ஆண்டு விமல் நடித்த 'காவல்' என்ற ஒரே படம் மட்டுமே வெளியாகி சுமாராக ஓடிய நிலையில் அவர் நடித்த மற்றொரு படமான 'அஞ்சல'...

தனுஷ்-வெற்றிமாறனின் 'வடசென்னை' இசையமைப்பாளர் அறிவிப்பு

வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன், ஆடுகளம் மற்றும் விசாரணை ஆகிய மூன்று படங்களுக்கும் இசையமைத்த ஜி.வி.பிரகாஷ்குமார்...

'டார்லிங் 2' படக்குழுவினர்களுடன் இணைந்த சிவகார்த்திகேயன்

சமீபத்தில் ரிலீஸான 'ரஜினிமுருகன்' படத்தின் வெற்றி சிவகார்த்திகேயனை நட்சத்திர அந்தஸ்து உடைய நாயகனாக மாற்றிவிட்டது...

33 மணி நேரத்தில் 3 மில்லியன் 'தெறி' பார்வையாளர்கள்

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' படத்தின் டீசர் நேற்று அதிகாலை 12 மணிக்கு வெளியானது. இந்த படத்தின் டீசர் வெளியான...

'இறுதிச்சுற்று' படம் பார்த்து அழுதேன். இயக்குனர் பாலா

சமீபத்தில் வெளியாகி அனைவரது பாராட்டையும் வரவேற்பையும் பெற்ற 'இறுதிச்சுற்று' திரைப்படம் குறித்து தேசிய விருது...