பெண்களைப் பாலியல் ரீதியாக இழிவுபடுத்திப் பேசிய 73 வயது நடிகர்
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவில் மட்டுமின்றி உலகெங்கும் பெண்களின் வாழ்க்கை முறை முன்னேறி வருகிறது. ஆண்களுக்கு சமமாக பெண்களும் சமூகத்தில் உயர்ந்த பதவிகள் பெற்று சொந்தக்காலில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தற்போது பெரும்பாலும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது தவிர்க்கப்பட்டும் வருகிறது.
ஆனாலும் ஒரிசில நபர்கள் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பொதுநிகழ்ச்சியில் அல்லது பேட்டியில் பேசி வாங்கி கட்டிக்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் இயக்குனர் சுராஜ் நடிகைகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி கடும் கண்டனத்தை சந்தித்த நிலையில் தற்போது தெலுங்கு நடிகர் ஒருவர் பெண்கள் மற்றும் படுக்கை குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை கூறி சிக்கலில் மாட்டியுள்ளார்
73 வயதான பழம்பெரும் தெலுங்கு நடிகர் சலபதிராவ் என்பவர் சமந்தாவின் வருங்கால கணவர் நாகசைதன்யா நடிப்பில் நாகார்ஜூனா தயாரிக்கும் புதிய திரைப்படமான 'ராரண்டோய் வேதுகா சுதம்' என்ற படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியபோது, 'பெண்களால் மன அமைதி கெடும் என்று இந்த படத்தில் நாக சைதன்யா வசனம் பேசியுள்ளார். அது உண்மையா என்று எனக்கு தெரியாது. ஆனால் பெண்கள் படுகைக்கு தான் மிகச் சரியானவர்கள் என்று சலபதி ராவ் தெரிவித்துள்ளார்.
இவருடைய பேச்சு படக்குழுவினர்களை மட்டுமின்றி இந்த விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியது. இவரது பேச்சுக்கு நாடு முழுவதும் பெரும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில் இதுகுறித்து நாகார்ஜூனா தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'நான் தனிப்பட்ட முறையில் மற்றும் என் படங்களில் எப்பொழுதுமே பெண்களை மதிப்பவன். நான் சலபதி ராவின் பேச்சை ஒருபோதும் ஏற்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com