தொட்டால் மண் உதிரும் வீடு....! ஒப்பந்தக்காரரை காசு போட்டு கட்ட சொல்லுங்க....கமல் காட்டம்....!
Send us your feedback to audioarticles@vaarta.com
எழும்பூர் தொகுதியில் அமைந்திருக்கும் கே.பி.பார்க், குடிசைமாற்று குடியிருப்பில், வீடுகள் தரமில்லாதது குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் டுவீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
சென்னையில் எழும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் தமிழக அரசு சார்பாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு, மக்களுக்கு வழங்கப்பட்டிருந்தன.
மக்கள் குடியேறிய சில நாட்களே ஆன நிலையில், "குடிசைமாற்று வாரிய குடியிருப்பில்" கட்டிடங்கள் தரமாக கட்டப்படவில்லை என்றும், வீட்டின் சுவரை தொட்டாலே உதிர்கிறது என்றும் அண்மையில் வெளியான களஆய்வு கூறியிருந்தது. அந்த வீடுகளில் ஆணி அடிக்க முடியாத நிலையும், தண்ணீர் பட்டாலே சுவர்கள் கரையும் நிலையும் ஏற்பட்டிருந்ததை, மக்கள் வருத்தத்துடன் கூறும் காணொளியை நாம் கண்டிருப்போம். அதுமட்டுமில்லாமல் வீடு எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்துடனே 24 மணி நேரமும் நாங்கள் வாழ்ந்து வருகிறோம். இரவில் உறங்குவதற்கு குழந்தைகளை அழைத்து வந்து வெளியில் படுத்துக்கொள்கிறோம் என்றும் அக்குடியிருப்பு மக்கள் வேதனை தெரிவித்தனர்.
இந்தநிலையில் இது குறித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது,
"புளியந்தோப்பு கே.பி. பார்க் பன்னடுக்கு குடியிருப்பு தொட்டாலே உதிர்கிறது. ஒவ்வொரு வீட்டிற்கும் எழுதிய செலவுக் கணக்கு சுமார் 15 லட்சம். 1000 ரூபாய் எலெக்ட்ரிக் ஷேவருக்குக் கூட ஓராண்டு கேரண்டி உண்டு.
இதைக் கட்டிய ஒப்பந்தக்காரரை உடனடியாக விசாரிக்கவேண்டும். மொத்த கட்டிடத்தையும் இடித்துவிட்டு அதே ஒப்பந்தக்காரரின் பணத்தில் புதிதாக கட்ட வைக்க வேண்டும். அரசு இக்கட்டிடத்தின் உறுதியை நேரடியாக கண்காணிக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
இதைக் கட்டிய ஒப்பந்தக்காரரை உடனடியாக விசாரிக்கவேண்டும். மொத்த கட்டிடத்தையும் இடித்துவிட்டு அதே ஒப்பந்தக்காரரின் பணத்தில் புதிதாக கட்ட வைக்க வேண்டும். அரசு இக்கட்டிடத்தின் உறுதியை நேரடியாக கண்காணிக்க வேண்டும் (2/2)
— Kamal Haasan (@ikamalhaasan) August 17, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout