டிவி பார்த்தால் குழந்தைகளின் உடல் பருமன் கூடுமா??? வெளியான அதிர்ச்சித் தகவல்!!!

  • IndiaGlitz, [Friday,June 26 2020]

 

சிறிய வயதில் குழந்தைகள் சற்று உருண்டு இருப்பதை பெரும்பலான பெற்றோர்கள் விரும்புகின்றனர். ஆனால் இது மருத்துவ ரீதியில் பெரும் சிக்கலாக பார்க்கப் படுகிறது. அதிலும் டிவி பார்க்கும் குழந்தைகளின் உடல் பருமன் கூடிக்கொண்டே போகும் என ஒரு அறிவியல் ஆய்விதழ் அதிர்ச்சியான தகவலை வெளியிட்டு இருக்கிறது. சிறிய வயதில் டிவி பார்த்தால் பின்னாட்களில் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் எனவும் அந்த ஆய்வு எச்சரிக்கை செய்திருக்கிறது.

குழந்தைகள் தாயின் கருவறையில் இருக்கும்போது ஏற்படும் மாசுகளால் குழந்தைகளுக்கு தாக்கம் ஏற்படுமா என்கிற ரீதியில் செய்யப்பட்ட ஒரு ஆய்வில் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தும் ஒரு புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. குழந்தைகள் உண்ணும் உணவை 5 வகையாகப் பிரிந்து 1480 குழந்தைகளை வைத்து ஒரு ஆய்வு மேற்கொள்ளப் பட்டு இருக்கிறது. பதப்படுத்தும் உணவு,. தூக்கம் குறைவாக இருக்கும் குழந்தைகள், கீரை வகைகளை உண்ணும் குழந்தைகள் என 5 பிரிவுகளாக பிரித்து குழந்தைகள் கண்காணிக்கப் பட்டனர். அதில் குழந்தைகள் எந்த உடல் இயக்கமும் இல்லாமல் வெறுமனே டிவி முன்பு உட்கார்ந்து இருப்பது பெரிய சிக்கலாக கண்டுபிடிக்கப் பட்டு உள்ளது.

அதிலும் 4 வயதுள்ள குழந்தைகள் டிவியை நெடுநேரம் உட்கார்ந்து கொண்டு பார்த்தால் அந்தக் குழந்தைகளின் 7 வயதில் அதிபடியான உடல் எடையை பெறுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. மிகச் சிறிய வயதில் இருக்கும் குழந்தைகளுக்கு உடல் இயக்கம் மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. உடல் இயக்கம் சிறிய வயதிலேயே தடைபடுவதால் வயதான பிறகு பல உடல் உபாதைகள் வருவதும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. Pediatric obesity என்ற அறிவியல் ஆய்விதழ் வெளியிட்ட கட்டுரையில் 4 வயது குழந்தைகள் டிவி பார்க்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தால் அவர்களுடைய 7 வயதில் அதிகபடியான உடல் எடையுடன் காணப்படுவார்கள் என்றும் அவர்களுக்கு Metabokic Syndrome என்ற நோய்க்குறைபாடும் தோன்றும் எனவும் விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளர்.

டிவி பார்க்கும் பெரும்பாலான குழந்தைகள் சாதாரணமாக நொறுக்குத் தீணிகளை உட்கொள்கின்றனர். மேலும் குழந்தைகளின் சிறிய வயதில் எலும்புகள் நரம்புகள் வலுப்பெறும் வகையில் உடல் இயக்கம் அவசியம் தேவைப்படுகிறது. அது தடைபடும்போது மேலும் சிக்கல் வலுக்கிறது என்ற அதிர்ச்சி தகவலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். டிவி பார்க்கும் பெரும்பாலான குழந்தைகளுக்கு தூக்கம் குறைந்து போகிறது. குறைவான தூக்கமும் பெரிய சிக்கலாக மாறிவிடுகிறது. இதுபோன்ற சிக்கல்களை தவிர்ப்பதற்கு பெற்றோர்கள் உடல் இயக்கத்தை ஊக்குவிக்க வேண்டியது அவசியம்.