எனக்கே சாராயம் இல்லைன்னா எவனும் குடிக்க கூடாது: பிரபல விஜேவின் வீடியோ

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் கடந்த மூன்று வாரங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் எந்தவித திரைப்பட படப்பிடிப்பும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் படப்பிடிப்பும் இல்லாததால் அனைத்து திரை நட்சத்திரங்களும், தொலைக்காட்சி நட்சத்திரங்களும் விஜேக்களும் தற்போது வீட்டில் சும்மா இருக்கிறார்கள்.

மேலும் நடிகர், நடிகையர், வீஜேக்கள் தங்களுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிடும் நகைச்சுவையான வீடியோக்கள் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மணிமேகலை, அஞ்சனா ஆகியோர் வெளியிட்டு வரும் வீடியோக்கள் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன.

இந்த நிலையில் தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னணி விஜேக்களில் ஒருவரான அஞ்சனா தனது சமூக வலைத்தளத்தில் சற்றுமுன் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அவர் இந்த வீடியோவில் வடிவேலு வசனத்தை கூறி நடித்துள்ளார். அதில் ’நான் பிறந்து வளர்ந்த இந்த ஊரில் எனக்கே சாராயம் இல்லைனா எவனுக்கும் இல்லை, எவனும் குடிக்கக்கூடாது’ என்று அந்த வசனத்தை வடிவேலுவின் ரியாக்சன் உடன் நடித்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவு காரணமாக நாடு முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கும் இந்த நிலையில் அஞ்சனாவின் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

More News

இன்று முதல் அனைத்து வங்கிகளையும் மூட உத்தரவு: அதிரடி அறிவிப்பு

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள அனைத்து வங்கிகளையும் இன்று முதல் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

செல்ஃபி எடுக்க முயன்று 15 நிமிடம் உயிருக்கு போராடிய இளைஞர்!

ஆபத்தான இடங்களில் செல்பி எடுக்க முயன்று பலர் உயிரை இழந்த சம்பவங்களை அடிக்கடி பார்த்து வருகிறோம். இந்த நிலையில் ரஷ்யாவில் இளைஞர் ஒருவர் செல்பி எடுக்க முயன்ற போது மாடியில் இருந்து தவறி விழுந்து

தமிழக அரசின் நடவடிக்கைகள் அருமை, அற்புதம், ஆனால்... ராகவா லாரன்ஸ் அறிக்கை

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கடந்த சில நாட்களாக தன்னார்வலர்கள் பலர் ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு மற்றும்

முதல்முறையாக நண்பர்கள், உறவினர்கள் இல்லாத கொண்டாட்டம்: ரம்பா வெளியிட்ட வீடியோ

உலகமெங்கும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் எந்தவித கொண்டாட்டமும் இல்லாத நிலையே உள்ளது.

உங்கள் எஜமானருக்காக காத்திருக்கின்றீர்களா முதல்வரே? கமல்ஹாசன் கேள்வி

நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட 21 நாள் ஊரடங்கு உத்தரவு நாளையுடன் முடிவடைய உள்ளது. இதனை அடுத்து மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை நீட்டித்து,