தினமும் தொழுகை செய்கிறீர்களா என கேள்வி கேட்ட நெட்டிசன்.....?சீரியல் நடிகை நச் பதில்...!
Send us your feedback to audioarticles@vaarta.com
பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை பரீனா. ஆரம்ப கால கட்டத்தில் ஆங்கராக இருந்த இவர் ஒரு சில சீரியல்களில் நடித்து வந்தார். ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது கண்ணம்மா சீரியல் மூலமாகத்தான். "ரியல் வாழ்க்கையிலும் இவரை பார்த்து பலர் வெறுத்துள்ளார்களாம்", இதற்கு காரணம் வெண்பா என்ற ரோலை மக்கள் அந்த அளவிற்கு பார்க்கிறார்கள் என ஒருசில பேட்டிகளில் கூறியிருப்பார்.
சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது டான்ஸ் வீடியோக்கள் மற்றும் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருவார். தற்போது கர்ப்பமாக உள்ள பரீனா வித்தியாசமான முயற்சியில் நீருக்கடியில், பாத்-டப் மற்றும் மெஹந்தி என கிரியேட்டிவான முறைகளில் "கர்ப்பிணி போட்டோஷூட்" புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். பலரும் நெகட்டிவ் கமெண்ட்டுகளையே பதிவிட்டு வர, "நா ரொம்ப பாசிட்டிவா இருக்கேன். நான் நடிப்பது நெகட்டிவ் ரோலாக இருந்தாலும், மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்கிறேன். இது என்னுடைய உடல், என்னுடைய குழந்தை. எப்படி பாதுகாப்பது என எனக்கு நன்றாகவே தெரியும்" என்று சொல்லி சர்ச்சை பேசியவர்கள் வாயை அடைத்தார்.
இந்நிலையில் சமீபத்தில் இன்ஸ்டாவில் ரசிகர்களுடன் கலந்துரையாடியுள்ளார் பரீனா. அதற்கு நெட்டிசன் ஒருவர் "வயிற்றை காட்டி போட்டோ ஷுட் நடத்த வேண்டாம்" என்று கூறியுள்ளார். இதற்கு பதில் கூறிய பரீனா "‘நம்மை சுற்றி இருப்பவர்களுக்கு நல்ல உள்ளம் மற்றும் எண்ணம் இருந்தால் போதும் , நமக்கு ஒன்றும் ஆகாது’ என்று பதில் கூறியுள்ளார்.
மற்றொரு நபர் "ஒரு நாளைக்கு 5 முறை தொழுகை செய்கிறீர்களா? என விதண்டாவாதமாக கேள்வி கேட்க, "ஒவ்வொரு நாளும் நான் யோகா பயிற்சி செய்கிறேன்" என்று கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Bala Vignesh
Contact at support@indiaglitz.com
Comments