செந்தில்-ஸ்ரீஜா வீட்டில் இன்று என்ன விசேஷம்? க்யூட் புகைப்படம்..
Send us your feedback to audioarticles@vaarta.com
தொலைக்காட்சி சீரியல் நட்சத்திர ஜோடி செந்தில்-ஸ்ரீஜா ஜோடிக்கு திருமணமாகி 8 ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில் பெற்றோர் ஆன நிலையில் தற்போது அந்த குழந்தையின் புகைப்படத்தை இன்று வெளியிட்டுள்ளனர். மேலும் இன்று இந்த தம்பதியின் திருமணநாள் என்பது குறிப்பிடத்தக்கது.
‘சரவணன் மீனாட்சி’ என்ற தொடர் மூலம் மிகப்பெரிய அளவில் புகழ்பெற்றவர்கள் செந்தில் மற்றும் ஸ்ரீஜா என்பது தெரிந்ததே. இந்த தொடரில் இருவரது கெமிஸ்ட்ரி சூப்பராக இருந்ததை எடுத்து இந்த ஜோடி நிஜ வாழ்விலும் இணைந்தனர்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு ஸ்ரீஜா கர்ப்பமாக இருப்பதாக செந்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்த நிலையில் சமீபத்தில் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் இன்று செந்தில் மற்றும் ஸ்ரீஜாவின் 9வது திருமண நாள் கொண்டாடப்படும் நிலையில் தங்களது குழந்தையின் புகைப்படத்தை முதல்முறையாக இருவரும் இணைந்து வெளியிட்டுள்ளனர்.
இதனை அடுத்து ரசிகர்கள் செந்தில்-ஸ்ரீஜா தம்பதிக்கு திருமண வாழ்த்தையும் குழந்தைக்கு தங்களது வாழ்த்தையும் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com