close
Choose your channels

சின்னத்திரை டிஆர்பியில் சறுக்கியதா 'சிறகடிக்க ஆசை'.. முதல் 10 இடங்களில் எந்தெந்த சீரியல்கள்?

Friday, June 28, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சன் டிவி, விஜய் டிவி, ஜீ டிவி ஆகியவற்றில் ஏராளமான சீரியல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிலையில் ஒவ்வொரு வாரமும் இந்த சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் குறித்த தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’ராமாயணம்’ தொடர் 10வது இடத்தை பெற்றுள்ளது. ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் ’கார்த்திகை தீபம்’ 9வது இடத்தை பெற்றுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியல் 8வது இடத்தை பிடித்துள்ளது.

கடந்த வாரம் 9வது இடத்திலிருந்த ’சுந்தரி 2’ சீரியல் இந்த வாரம் இரண்டு இடங்கள் முன்னேறி 8வது இடத்தைப் பிடித்துள்ளது. அதேபோல் 7வது இடத்தில் கடந்த வாரம் இருந்த ’பாக்கியலட்சுமி’ சீரியல் இந்த வாரமும் அதே இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

இதனை அடுத்து 6வது இடத்தில் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட ’மல்லி’ சீரியல் பெற்றுள்ள நிலையில் ’சிறகடிக்க ஆசை’ சீரியல் 5வது இடத்தை பெற்றுள்ளது, கடந்த வாரம் ’சிறகடிக்க ஆசை’ 4வது இடத்தில் இருந்த நிலையில் இந்த வாரம் ஒரு இடம் பின்தங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில வாரங்களுக்கு முன் தொடங்கப்பட்ட ’மருமகள்’ சீரியல் 4வது இடத்தையும் ’வானத்தைப்போல ’ சீரியல் 3வது இடத்தையும் பிடித்துள்ளது. கடந்த சில வாரங்களாக முதலிடத்தில் இருந்த ’சிங்க பெண்ணே’ சீரியல் தற்போது 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ள நிலையில் 2வது இடத்தில் இருந்த ’கயல்’ சீரியல் முதல் இடத்தில் உள்ளது.

மொத்தத்தில் முதல் 10 இடங்களில் உள்ள சீரியல்களில் ’கார்த்திகை தீபம்’ ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ மற்றும் ‘சிறகடிக்க ஆசை’ ஆகிய மூன்று சீரியல்கள் தவிர மற்ற அனைத்தும் சன் டிவி சீரியல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.