இதைவிட வாழ்க்கையில வேற என்ன வேணும்: டுவின்ஸ் பிறந்த நாளை கொண்டாடிய நட்சத்திர தம்பதி!
- IndiaGlitz, [Monday,March 29 2021]
பிரபல தொலைக்காட்சி நட்சத்திர தம்பதிகள் தங்களுடைய டுவின்ஸ் குழந்தைகளின் பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது
சின்னத்திரையில் பிரபலமான நட்சத்திர ஜோடிகளில் ஒன்று பிரஜின் மற்றும் சாண்ட்ரா என்பது தெரிந்ததே. நடிகை சாண்ட்ரா தொலைக்காட்சிகளில் பல சீரியல்களில் நடித்தவர் என்பதும் இவர் ’சின்னத்தம்பி’ உள்பட ஒரு சில சீரியல்களில் நடித்த பிரஜின் என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார் என்பதும் தெரிந்தது
10 ஆண்டுகள் கழித்து கடந்த 2019ஆம் ஆண்டு கர்ப்பமான சாண்ட்ராவுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. அந்த குழந்தைகளுக்கு மித்ரா மற்றும் ருத்ரா என்று பிரஜின் - சாண்ட்ரா தம்பதிகள் பெயர் வைத்தனர்
இந்த நிலையில் பிரஜின்-சான்ட்ராவின் குழந்தைகளின் இரண்டாம் ஆண்டு பிறந்தநாள் சமீபத்தில் கோலாகலமாக கொண்டாட்டப்பட்டது என்பதும், இந்த விழாவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பிரஜன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’இதை விட வாழ்கையில் வேற என்ன வேணும்? எனது இளவரசிகள் மிக வேகமாக வளர்ந்து வருகின்றனர். எப்பொழுதுமே பெண் குழந்தைகள் என்றால் அப்பாவின் செல்லம் தான். இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா! என்று பதிவு செய்துள்ளார். அவருடைய பதிவும் அவர் பதிவு செய்துள்ள புகைப்படமும் வைரல் ஆகி வருகிறது