துணையை கண்டுபிடித்த விவாகரத்தான நடிகைக்கு திருமணம்.. க்யூட் புகைப்படங்கள்..!
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
விவாகரத்தான மூன்று ஆண்டுகள் கழித்து துணையை கண்டுபிடித்ததாக சமீபத்தில் அறிவித்த நடிகை தற்போது திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில் அந்த திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சின்னத்திரையில் பிரபலமாக இருக்கும் நடிகை நிவேதிதா, சீரியல் நடிகர் சுரேந்தர் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த புகைப்படங்கள் இருவரது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வைரல் ஆகி வருகிறது.
பிரபல சீரியல் நடிகை நிவேதிதா, ஆரியன் என்பவரை கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். அதன் பிறகு மூன்று ஆண்டுகள் தனியாக இருந்த நிவேதிதா சமீபத்தில் தான் தன்னுடைய துணையை கண்டுபிடித்து விட்டதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.
‘திருமகள்’ என்னும் சீரியலில் நிவேதிதா நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அதே சீரியலில் நடித்த சுரேந்தர் தான் அவரது காதலர் என்பதும் தெரியவந்தது. மூன்று ஆண்டுகள் கழித்து தற்போது என்னுடைய துணையை கண்டுபிடித்து விட்டேன் என்றும் ஸ்பெஷலான ஒருவருடன் இணைய இருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாகவும் அடுத்த கட்ட வாழ்க்கையை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன் என்றும் பதிவு செய்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது நிவேதிதா - சுரேந்திரன் திருமணம் நடந்துள்ள நிலையில் இந்த திருமணம் குறித்த புகைப்படங்கள் இருவரது சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் புதுமண தம்பதிகளுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
![](https://jscss.indiaglitz.com/anomusercomment.jpg)