25 ஆண்டுகால சின்னத்திரை நடிகர்.. புற்றுநோயால் இறந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சின்னத்திரையில் 25 ஆண்டு காலமாக நடித்து வரும் பிரபல நடிகர் ஒருவர் புற்றுநோய் காரணமாக காலமானதை தொடர்ந்து, ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
’மருதாணி’ என்ற சீரியலின் மூலம், கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் சின்னத்திரையில் நடிகராக அறிமுகமானவர் நேத்ரன். அதன் பிறகு, ’சூப்பர் குடும்பம்’, ’முள்ளும் மலரும்’, ’வள்ளி’, ’பாவம் கணேசன்’, ’உறவுகள் சங்கம்’ உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தார். தற்போது, கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ’ரஞ்சிதமே ’தொடரிலும் நடித்து வந்தார்.
இவருடைய மனைவி தீபா, சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிங்க பெண்ணே’ தொடரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நேத்ரன்-தீபா தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் அபிநயா, ’கனா காணும் காலங்கள் சீசன் 2’ வெப் தொடரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில மாதங்களாக, நேத்ரன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு அறுவை சிகிச்சை கூட செய்யப்பட்டதாகவும், கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று நேத்ரன் காலமானார். அவருடைய மறைவு அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் சின்னத்திரை உலக நட்சத்திரங்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சின்னத்திரை நட்சத்திரங்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments