ஹைக்கூ கவிதையுடன்....! அப்பா ஆன நெகிழ்வை பதிவிட்ட பிரபல சீரியல் நடிகர்....!

  • IndiaGlitz, [Wednesday,August 25 2021]

சன் தொலைக்காட்சியில் வெளியான வம்சம் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் தான் நடிகர் சசிந்தர் புஷ்பலிங்கம். இதன்பின்பு பிரியங்கா ராவ், சந்தியா, ஜெய லட்சுமி, ஷாமிலி சுகுமார் உள்ளிட்ட பிரபல சீரியல் நடிகைகளுடன், பல சீரியல்களில் தொடர்ந்து நடித்து வந்தார். விஜய் டிவியில் வெளியான ஒளிபரப்பான தமிழ் கடவுள் முருகன் தொடரில், சிவன் மற்றும் வீரபத்திரன் கேரக்டர்களில் தன்னுடைய வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இதையடுத்து சன் டிவியில் வெளியான சந்திரகுமாரி, ரோஜா சீரியல்களில் நடித்ததன் மூலம், ரசிகர்களை மத்தியில் மிகவும் பிரபலமானார்.

இதேபோல் விஜய் டிவியில் நாம் இருவர் நமக்கு இருவர்-1 தொடரில் நடித்தவர், தற்போது இரண்டாம் பாகத்திலும் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். சென்ற வருடம் கொரோனா ஊரடங்கின் போது திருமணம் செய்த நட்சத்திர தம்பதிகளில், இவரும் ஒருவர். சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சசிந்தர், அவ்வப்போது தன் மனைவியுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருவார். அண்மையில் தன் கர்ப்பிணி மனைவியுடன், எடுத்த புகைப்படங்களை சேயையும் தாயையும் சேர்த்து தாங்கும் கரம், வரம் என்று கவிதையுடன் வெளியிட்டு இருந்தார். இவை சமூகவலைத்தளங்களில் வைரலாக, ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக்குவித்து வருகிறார்கள்.

More News

கேப்டன் என்பது ஒரு மந்திரசொல்: விஜய்காந்த் குறித்து அம்மா கிரியேஷன்ஸ் சிவா

கேப்டன் விஜயகாந்த் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதை அடுத்து அவருக்கு திரையுலகினர் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

ஆயுத பூஜை தினத்தில் வெளியாகும் 'சார்பாட்டா பரம்பரை': ரசிகர்கள் மகிழ்ச்சி

பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, துஷாரா, பசுபதி இயக்கத்தில் உருவான 'சார்பாட்டா பரம்பரை திரைப்படம் சமீபத்தில் அமேசான் ஓடிடியில் வெளியானது என்பதும் இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது

நிச்சயதார்த்த புகைப்படத்தை வெளியிட்ட அமலாபால்: இணையத்தில் வைரல்

நடிகை அமலாபால் வெளியிட்ட நிச்சயதார்த்த புகைப்படம் இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

காமத்திற்காக பிணங்களைக் கூட விடமாட்டார்கள்… தாலிபான்கள் குறித்து பதறும் இளம்பெண்!

ஆப்கானிஸ்தானில் போலீஸ் படையில் வேலைப்பார்த்து வந்த இளம்பெண் ஒருவர் அங்கிருந்து தப்பி இந்தியாவின் தலைநகரான டெல்லியில் அடைக்கலம் புகுந்துள்ளார்.

செப்-1-ல் கல்லூரிகள் திறக்கப்படும்.....! மாணவர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன.....?

தமிழக அரசு செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் கல்லூரிகளை திறக்கலாம் என அறிவித்துள்ளது.