இவங்களுக்காக சினிமா வாய்ப்பை மறுத்தேன்.....! பிரபல இளம் சீரியல் நடிகை.....!
Send us your feedback to audioarticles@vaarta.com
கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகிவரும் "இதயத்தை திருடாதே" சீரியல் மூலம், கதாநாயகியாக நடித்து ரசிகர்களை கவனம் ஈர்த்தவர் தான் நடிகை ஹிமா பிந்து. ஆந்திராவை சொந்த ஊராக கொண்ட இவரின் குடும்பம் சினிமா பின்னணி கொண்டது. இதனால் சிறுவயது முதலே டான்ஸ், பாட்டு, நடிப்பு போன்றவற்றில் ஆர்வமாக இருந்துள்ளதால், அனைத்தையும் கற்றுக்கொண்டுள்ளார் ஹிமா. பேஷன் டிசைனிங் படித்துக்கொண்டிருக்கும் போது இவருக்கு சினிமா வாய்ப்புகள் வர துவங்கியது, அப்போது பெற்றோர்கள் சம்மதிக்காததால், படிப்பை தொடர்ந்துள்ளார். இதையடுத்து இறுதியாண்டு கல்லூரி படிக்கையில் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ‘ஐஆர் 8’ என்ற திரைப்படம் ஒன்றில் நடிகையாகவும் நடித்துள்ளார்.
இந்நிலையில் ஹிமாவிற்கு வெள்ளித்திரையிலும் பல வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. இதயத்தை திருடாதே தொடர் 1-ஆம் முடிந்து, 2ஆம் பாகம் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் "சிவா- சஹானா" ஜோடிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் உண்டு. சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஹிமா அவ்வப்போது ரீல்ஸ் வீடியோக்களையும், போட்டோஷூட் புகைப்படங்களையும் பதிவிட்டு வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Bala Vignesh
Contact at support@indiaglitz.com
Comments